இலங்கை பிரச்சனை: நார்வே முயற்சிக்கு நெருக்கடி
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க முயலும் நார்வேயின் முயற்சிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்க அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின்ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இலங்கை நிர்வாகத்தில் எதிர்க்கட்சிகள் கோரும் சீர்திருத்தத்தை இலங்கை அரசுசெயல்படுத்தினால் இனப்பிரச்சனையை தீர்க்க உதவுவதாக இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியகட்சி தெரிவித்துள்ளது.
நார்வே அமைதிக்குழு இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்த வரும் போதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியின்தலைவர்களையும் சந்தித்து பேசுவது வழக்கம்.
இலங்கை இனப்பிரச்சனை தீர இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால்,அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு இல்லாமல்இது முடியாது.
அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டால் அதனை ஏற்பதாக ஐக்கிய தேசிய கட்சியும் கூறியது. அதே நேரம் சந்திரிகாகுமாரதுங்கா அரசை பதவியில் இருந்து வெளியேற்ற பல்வேறு வகையிலும் முயன்று வந்தது ஐக்கிய தேசிய கட்சி.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று கண்டியில் இருந்து கொழும்பு வரை பெரிய பேரணி ஒன்றை நடத்தியது. மற்றஎதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த ஆளுங்கட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லாத்தீர்மானம் தோல்வியுற்றது.
இதனிடையே, தற்போது நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்ரணில் விக்ரமசிங்கே, நார்வேயின் அமைதி முயற்சிக்கு தமது கட்சி ஆதரவு தர வேண்டுமானால், இலங்கைநீதித்துறை, காவல் துறை, தேர்தல் ஆணையம், பொது நிர்வாகம் ஆகியவற்றிற்கு தனி ஆணையம் அமைக்கவேண்டும் என்றார் .
இந்த துறைகளின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் என இலங்கையில் உள்ளஎல்லா எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இலங்கை எதிர்க்கட்சிகள் கோரும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் அனைத்தும் இலங்கையின் புதிய அரசியல்சாசன மசோதாவில் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தான் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல்செய்து வருவதாகவும் ஆளுங்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications