For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவிலிருந்து மதிமுக விலகியதன் பின்னணி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மதிமுக நடத்திய ரகசியக் கூட்டத்தில் பேசிய விஷயம் முழுவதுதையும் முதல்வர் கருணாநதி ஒட்டுக் கேட்டுவிட்டதால்தான் மதிமுகவை, திமுகவிலிருந்து வெளியேற்றினார் கருணாநிதி என்று கோவையைச் சேர்ந்த மதிமுகபிரமுகர் ஒருவர் கூறினார்.

அவர் கூறிய விவரங்கள்:

வைகோவிற்கு வலது கரமாகத் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், திமுகத் தலைவர் கருணாநிதிக்கும் நெருக்கமாகஇருந்துள்ளார்.

வைகோ, அவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருந்தபோதிலும், கலைஞர் மீதும் தனிப் பாசம் வைத்திருந்தார்.தொகுதி உடன்பாட்டின்போது, மதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ராதாகிருஷ்ணனும்இருந்தார்.

திமுக மீது பிரியம் வைத்திருந்ததால் ராதாகிருஷ்ணனுக்கு, முதல்வர் கருணாநிதியை கட்சியினர் திட்டித் தீர்த்ததுபிடிக்கவில்லை. அவ்வாறு கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தனது செல்போனைஆன் செய்து வைத்திருந்தாராம். கட்சியினர் திட்டுவதெல்லாம் முதல்வரின் காதில் நேரடியாக இடியாக இறங்கஅதிர்ச்சியடைந்துவிட்டாராம் முதல்வர். அடுத்த நாளே மதிமுகவுடன் உறவு வேண்டாம் என நினைத்தமுதல்வர், மதிமுகவிற்கு 3 தொகுதிகளில் கேட்பதைக் கொடுக்க முடியாது எனக் கூறி விட்டாராம்.

முன்பு 35 இடங்களைக் கேட்ட மதிமுகவிற்கு 21 இடங்களை கேட்ட தொகுதிகளை தருவதாக முதல்வர் ஒப்புக்கொண்டிருந்தாராம். மதிமுக பிரமுகர்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போன முதல்வர், மதிமுகவைவெளியேற்ற இதையே காரணமாக்கி விட்டார்.

மதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டத்திற்குப் பிறகு திடீர் என தலைமறைவாகி விட்ட செய்தித் தொடர்பாளர்ராதாகிருஷ்ணன், அப்படியே திமுகவிற்குச் சென்று ஐக்கியமாகி விட்டார் ராதாகிருஷ்ணன்.

உண்மை இப்படி இருக்க, சீட் கிடைக்காத அதிருப்தியால் ராதாகிருஷ்ணன் விலகிக் கொண்டார் என்பதெல்லாம்சரியல்ல. இதை அவரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற வேண்டும் என்றஎண்ணம் அவரிடம் இருந்தாலும், அவரே மதிமுக வெளியேறக் காரணமாகவும் அமைந்து விட்டார்.

"காது குளிர திட்டு வாங்கி விட்ட முதல்வர், மதிமுக உறவை முற்றிலும் முடித்து விட்டார். அடுத்து பாரதியஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் வெங்கையா நாயுடு, இல.கணேசன், ஜனா.கிருஷ்ணமூர்த்தி உள்படஅத்தனைபேரும் முதல்வரிடம் சொல்லியும், சமாதானப்படுத்தியும் முதல்வரின் கோபம், பிடிவாதம்குறையவில்லை. கூட்டணியே போனாலும் சரி, இனி உறவு இல்லை என்ற முடிவில் அவர் உறுதியாக நின்றுவிட்டார் என்றார் மதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X