பினாமி ஆட்சி நடத்த இது பீகார் அல்ல: சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

பினாமி ஆட்சி நடத்த இது பீகார் மாநிலம் அல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர்ப.சிதம்பரம் பேசினார்.

கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழ் மாநிலகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர் ப.சிதம்பரம், சிங்காநல்லூர் தொகுதியில் அமைச்சர் பழனிச்சாமியைஆதரித்துப் பேசியதாவது:

பாரதிய ஜனதாக் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது 18 எம்.பிக்களை வைத்துக் கொண்டு என்னபாடுபடுத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்தலிலாவது மக்கள் அதிமுகவிற்கு கால் புள்ளி,அரைப் புள்ளி வைக்காமல் முற்றுப்புள்ளி வையுங்கள்.

ஜெயலிலதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான தீர்ப்பு வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.அந்த நேரத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தால், தமிழகத்தின் கதி என்ன என்பதை மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

பினாமி ஆட்சி நடத்த இது ஒன்றும் பீகார் அல்ல. தமிழ் மாநில காங்கிரசின் ஆதரவை திரட்டி திமுகவை வெற்றிபெறச் செய்யவும், வாக்களிக்காத 40 சதவீத மக்களின் நிலையை மாற்றி அவர்களை வாக்களிக்கச் செய்யவும் நான்பிரச்சாரம் மேற் கொண்டுள்ளேன் என்றார்.

திருப்பூரில் பா.ஜ.,வேட்பாளரை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதாவது:

தவறு செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகலாம். ஆனால் தண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தமிழ்நாட்டில் 20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட களங்கம், 21ம்நூற்றாண்டிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஊழல், அகங்காரம், பதிலளிக்காமை,ஆணவம் எல்லாம் அதிமுக ஆட்சியின் அங்க அடையாளங்கள்.

தமிழ் மாநில காங்கிரசிடமிருந்து 21 இடங்களைப் பறித்துக் கொண்டனர். கம்யூனிஸ்டுகளிடமிருந்தும்தொகுதிகளைப் பறித்துக் கொண்டனர். பாண்டிச் சேரியில்எட்டி உதைக்காத நிலை தான்.

அப்படியிருந்தும் இவர்கள் ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க ஏன் இந்த பாடுபடுகிறார்கள் எனத் தெரியவில்லை.தமிழகம், இவர்களை விட்டால் வேறு நாதி எதுவும் இல்லையா?

ஓர் ஊழல் குற்றவாளி தேர்தலில் போட்டியிடலாம், தவறு செய்தவர்கள் போட்டியிடலாம், ஆனால், தண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகாரத்தைக் கையாள முடியாது. இன்னும் சில மணிநேரங்களில் இதற்கான விடை கிடைத்து விடும் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+