திமுகவிலிருந்து விலகினார் பவானி தொகுதி எம்.எல்.ஏ.
தர்மபுரி:
திமுகவில் சீட் கிடைக்காமல் விலகிய பவானி தொகுதி எம்.எல்.ஏ, ஆண்டமுத்து பாட்டாளி மக்கள் கட்சியில்சேர்ந்தார்.
திமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியிலிருந்து ஆண்டமுத்து எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்புதிமுகவிலிருந்து விலகினார். இது குறித்த ராஜினமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.
இவர் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் அதன் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து ஆண்டமுத்து கூறியதாவது:
பவானித் தொகுதி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக வசமே இருந்து வந்தது. இந்த தொகுதியை மீட்டுதிமுக வசம் கொண்டு வந்தேன். இந்த தொகுதியில் 25 ஆயிரம் ஓட்டுகளுக்கும் மேலான வித்தியாசத்தில் நான்வெற்றி பெற்றேன்.
ஆனால், எனது தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பு வந்ததில்லை. எனது பெயர்அழைப்பிதழ்களில் போடப்படவில்லை. மேலும் எனக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை.
கோபி, சத்தி, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, பவானி தொகுதிகளில் எனக்கு செல்வாக்கு உள்ளது. இந்ததொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிக்காக பாடுபடுவேன் என்றார் ஆண்டமுத்து.












Click it and Unblock the Notifications