புதுக்கோட்டை, புவனகிரியிலும் ஜெ. வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீடீர் திருப்பமாக திங்கள்கிழமை புதுக்கோட்டை, புவனகிரி தொகுதிகளிலும் ஜெயலலிதா வேட்பு மனுக்களைதாக்கல் செய்தார்.
ஏற்கனவே அவர் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி தொகுதிகளிலும் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஜெயலலிதா இரு இடங்களில் கூடுதலாக வேட்பு மனுக்களைதாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் மொத்தம் 4 இடங்களில் போட்டியிட மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. அவரது வேட்பு மனுக்கள் ஏற்கப்படுமாஇல்லையா என்பது நாளை தெரியவரும்.
புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் விஜயபாஸ்கர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.அதே போல கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் அதிமுக சார்பில் கருணாநிதி என்பவரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications