For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளின் சண்டை நிறுத்தம் வாபஸ்: இலங்கையில் பீதி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப்புலிகள் 4 மாதமாக அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தை வாபஸ்பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் தீவிர தாக்குதல் நடத்தக் கூடும் என அஞ்சப்படுவதால்யாழ்பாணம் மற்றும் வட-கிழக்குப் பகுதிகளில் பதற்றமும் பயமும் நிலவுகிறது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இலங்கையில் இனக் கலவரத்தை முடிவுக்குகொண்டுவரும் நல்லெண்ணத்துடன் சண்டை நிறுத்தத்தை விடுதலைப் புலிகள்அறிவித்தனர்.

இதற்கு இலங்கை அரசும் ஒத்துழைத்து ராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதை இலங்கை அரசு ஏற்கவில்லை. ராணுவ தாக்குதல் தொடர்ந்துநடைபெற்றது. வழக்கத்தை விட கூடுதலாக தாக்குதல் நடத்தியது.

விடுதலை புலிகள் தங்கள் சண்டை நிறுத்தத்தை நீடித்துக்கொண்டே வந்தனர். அவர்கள்நீட்டித்த சண்டை நிறுத்தம் (இன்று) செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருகிறது.இதையடுத்து மீண்டும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்காத புலிகள் தாங்கள் சண்டைநிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளவதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவு முதலே சண்டை நிறுத்தத்தை விலக்கிக்கொள்வதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

தாங்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதற்கு இலங்கை அரசுதான் காரணம் எனபுலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாங்கள் அறிவித்த சண்டை நிறுத்தத்தை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஏற்றுக் கொள்ளவில்லை.

வட கிழக்கு பகுதிகள் மேல் விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையையும்நீக்கவில்லை. எங்கள் மீது ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தினார்.

நாங்கள் எடுத்த அமைதி முயற்சிக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. மாறாகஎங்கள் மீது ராணுவம், விமானப்படை, கடற்படை மூலமாக தாக்குதல் நடத்தினர்.இதனால் எங்கள் தரப்பில் பல வீரர்கள் இறந்துள்ளனர்.

எங்கள் அமைதி முயற்சி பலனளிக்காததால் நாங்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ்பெறுவது என்ற முடிவை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த முடிவைகனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம்.

கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் சண்டை அறிவித்த பின், இலங்கை ராணுவம் நடத்தியதாக்குதலில் எங்கள் தரப்பில் 160 வீரர்கள் இறந்துள்ளனர். 400 வீர்ரகள்காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என நார்வே தூதுக்குழுவினர் எடுத்துவரும் அமைதி முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

நாங்கள் 4 மாதமாக அறிவித்து நடைமுறைப்படுத்திய சண்டை நிறுத்தத்தின் போதுசிங்களர்கள் வாழும் தென் பகுதியில் அமைதி நிலவியது. தொடர்ந்து அமைதி நிலவும்என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு அளித்தது.

ஆனால் இதே சமயத்தில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்துதாக்குதல் நடத்தப்பட்டது. பலர் இறந்து போனார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் நாங்கள் அறிவித்தசண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தத் தவறிவிட்டன.

மாறாக சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு பொருளாதார, ராணுவ உதவிகளைவழங்கி இலங்கை அரசு எடுத்த முடிவை ஆதரிக்கும் விதமாக செயல்பட்டன.

சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருந்தாலும் கூடஇன்னமும் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்.

இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.

இலங்கை அரசின் கருத்து:

புலிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளது எந்த விதமான பாதிப்பையும்ஏற்படுத்தாது என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத்கருணரத்னே கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது குறித்து அவர்கருத்து தெரிவிக்கையில், விடுதலை புலிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

ஏனென்றால் அவர்கள் அறிவித்த 4 மாத சண்டை நிறுத்தத்தின்போது அவர்களேசண்டை நிறுத்த்தை முடிவை 220 முறை மீறியுள்ளனர்.

ராணுவம் என்றுமே தயார் நிலையில்தான் இருந்து வருகிறது. அவர்கள் சண்டைநிறுத்தம் அறிவித்ததால் எந்த மாற்றமும் இல்லை. இப்போது வாபஸ் பெற்றதாலும் எந்தமாற்றமும் ஏற்படாது.

அவர்கள் சண்டை நிறுத்தம் அறிவித்த நாளுக்கு பின் 5 ராணுவ வீரர்களும், 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

69 ராணுவவீரர்களும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். 5 ராணுவ வீர்ரகளும்,பொதுமக்களில் ஒருவரும் காணாமல் போயுள்ளனர் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X