சாப்ட்வேர்: அமெரிக்கா ஏமாற்றியதா? ஐரோப்பா அழைக்கிறது
பெங்களூர்:
அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கத்தால் வேலை இழந்து இந்தியா திரும்பி வரும் ஆயிரக்கணக்கான உள்நாட்டில் வேலைஇழந்த சாப்ட்வேர் நிபுணர்களுக்கும் ஒரு நல்ல செய்தி.
இவர்களுக்கு கதவைத் திறக்கக் காத்திருக்கிறது ஐரோப்பா. ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 லட்சம் சாப்ட்வேர் நிபுணர்கள்தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் அந் நாடுகளின் அரசுத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நார்வேயும் ஆஸ்திரியாவும் ஆயிரக்கணக்கான அரசு வேலைகளைக் கையில் வைத்துக்கொண்டு, சிறந்த தகவல் தொழில்நுட்பவல்லுநர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
வரும் 2003ம் ஆண்டுக்குள் ஐரோப்பா முழுவதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஜெர்மனியில் மட்டும் 4 லட்சம் காலியிடங்கள் உள்ளன. 1 லட்சத்திற்கும் அதிகமான வாய்ப்புக்களைபிரான்ஸ் அறிவித்திருக்கிறது.
நார்வேயில் 16,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் நியமிக்கப்படஉள்ளனர். ஆஸ்திரியாவுக்கு 32,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். ஐரோப்பாவின் வேறு பலநாடுகளிலும் இன்னும் பல ஆயிரக் கணக்கான வேலை வாய்ப்புக்கள் திறக்கப்பட உள்ளன.
இந்த 16 லட்சம் காலியிடங்களையும் உடனடியாக நிரப்பாவிட்டால், ஐரோப்பாவுக்கு சுமார் 200 பில்லியன் யூரோக்கள் நஷ்டம்ஏற்படும்.
திறமையான சாப்ட்வேர் நிபுணர்கள் தேவைப்படுவதால், ஏராளமான ஐரோப்பிய நாடுகள் இமிக்ரேசன் மற்றும் விசாகிடைப்பதற்கான நெறிமுறைகளை வெகு வேகமாக தளர்த்தி வருகின்றன. மூன்று வருடங்களுக்கு முன் இதைப் பற்றி நாம்நினைத்திருக்கக்கூட முடியாது.
இவ்விஷயங்களை ஜெர்மனி ஏற்கனவே செய்து விட்டது. இதன் மூலம் ஒரு நல்ல சாப்ட்வேர் நிபுணர் 5 ஆண்டுகள் வரை ஜெர்மனியில்எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் தங்க முடியும். ஜனவரி 2002-க்குள் நார்வேயும் தனது புதிய கொள்கையை அறிமுகப்படுத்திவிடும்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் இந்தியர்களுக்கு இதுவரை எந்தவிதப் பிரச்சினையும் வந்தது கிடையாது.
இதுவரை இருந்துவந்த மொழிப் பிரச்சினையும் இனி வரும் நாட்களில் இருக்காது. ஐரோப்பாவில் பணிபுரிய வரும் எந்த ஒரு சாப்ட்வேர்நிபுணரும் ஆங்கில மொழி மட்டும் தெரிந்து வைத்திருந்தாலே போதும்.
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாப்ட்வேர் 5 சதவிகிதம் மட்டுமே.
சென்னை மற்றும் டெல்லியில் தன் அலுவலகங்களை வைத்திருக்கும் ஸ்டெப்ஸ்டோன் வேலைவாய்ப்பு நிறுவனம், பெங்களூரில் தன்மூன்றாவது அலுவலகத்தையும் செவ்வாய்கிழமை திறந்தது. வெகு விரைவில் 7,000 சாப்ட்வேர் நிபுணர்களைத் தேர்வு செய்துஐரோப்பாவுக்கு அனுப்பவிருக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!