கிருஷ்ணசாமியை எதிர்த்து மகளிர் பிரிவு செயலாளர் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்து ஒட்டப்பிடாரம்தொகுதியில் அக்கட்சியின் மகளிர் பிரிவு செயலாளர் போட்டி வேட்பாளராக நிற்கிறார்.

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் அணி 10 தொகுதிகளில்போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வால்பாறை மற்றும்ஒட்டப்பிடாரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமியை எதிர்த்து அவரது கட்சியின் மகளிர்பிரிவு செயலாளர் கல்யாணி பெருமாள் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளார். இது புதிய தமிழகம் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் பெண்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படாததைக் கண்டித்து தான்சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்ததாக கல்யாணி பெருமாள் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சி துவங்கியதில் இருந்து நான் உறுப்பினராகஇருந்து வருகிறேன். டாக்டர் கிருஷ்ணசாமி எடுக்கும் எல்லா முடிவுக்கும்கட்டுப்பட்டு நடந்து வருகிறேன்.

தி.மு.கவுடான கூட்டணி குறித்து கட்சியின் பிற நிர்வாகிகளுடன் டாக்டர் கிருஷ்ணசாமிகலந்து பேசவில்லை. இது எனக்கு அதிருப்தியைத் தந்தது. மேலும் 10 தொகுதிகளின்வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது, அதில் ஒருவர் கூட பெண் இல்லை என்றுஅறிந்ததும் வேதனை அடைந்தேன்.

கடந்த தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்காகதீவிரமாக பாடுபட்டேன். அந்தத் தொகுதி மக்கள் என்னை தேர்தலில் நிற்குமாறுகோரினர். இதனால்தான் இங்கு சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன் என்றார்கல்யாணி பெருமாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+