நானே முதல்வர் என்கிறார் ஜெ.
கோவை:
அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றால் நானே முதல்வர். தொண்டர்கள், மக்களின்விருப்பமும் இதுவே என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:
எனது நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் நான் வருத்தமடையவில்லை. மாறாக மகிழ்ச்சியேஅடைகிறேன். நான் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு ஏற்கப்பட்டிருந்தால் ஓரிரு இடங்களில்போட்டியிட்டியிருப்பேன்.
ஆனால், இப்போது நிராகரிக்கப்பட்டதால் 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன், பிரசாரம்மேற்கொள்கிறேன். நானே அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்.
அதிமுக கூட்டணியில் அனைத்து பொறுப்புகளும், கடமையும் எனக்குத் தான் உள்ளது. அனைத்திற்கும் என்னையேமுதன்மைப்படுத்துகின்றனர். இது பழகி விட்டது. எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக இருந்தபோது எனக்குஅதிக முக்கியத்துவம் இருந்தது. அதற்கேற்ப எனக்கு பொறுப்புகளும் கடமைகளும் இருந்தது.
தற்போது திமுக ஆட்சியில் மதவாதம், தீவிரவாதம் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குசீர்குலைந்து விட்டது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் கொப்பரைத் தேங்காய்ஊழல், மருத்துவக் கருவிகள் வாங்குவதில் ஊழல், விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதில் ஊழல், சந்தனக்கிடங்கை எரித்து ஊழல், என எல்லமே ஊழல் மயமாகி விட்டது.
உங்களுக்காக என்னையே அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன். மக்களாகிய நீங்கள் வழங்கும் தீர்ப்பு தான்இறுதியான தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்பேன் என்றார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications