• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலம் போட்ட கருணாநிதி சேலை சேர்த்த ஜெயலலிதா: டி.ராஜேந்தர்

By Staff
|

சென்னை:

இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும்நிலையில் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

வழக்கம் போல் நடிகர், நடிகைகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.கவுக்கு ஆதரவாக நடிகை ராதிகா, அவரது கணவர் நடிகர் சரத்குமார், வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் நடிகர் நெப்போலியன், பூங்கா நகர் தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் நடிகரும்,இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.கவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர் ராதாரவி, நடிககைகள் அம்பிகா, ராதா, நடிகையும்,மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகளுமான விசாலி மனோகரனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க:

நடிகை ராதிகா (பொன்னேரி)

தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகள்தான் போட்டியிடுகின்றன.

தி.மு.க. வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர் அ.தி.மு.க வெற்றி பெற்றால் யார் முதல்வர்?

ஜெயலலிதா செய்த ஊழலால் அவரால் தேர்தலில் கூட போட்டியிட முடியவில்லை. நானும் எனது கணவரும்எல்லா வேலைகளையும் தவிர்த்து விட்டு தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுகிறோம்.

நடிகர் நெப்போலியன் (சென்னை)

சென்ற முறை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும் அனுதாப அலையால் ஆட்சிக்கு வந்தவர்கள் ரூ25,000 கோடி கொள்ளையடித்தனர். அவர்கள் மீண்டும் வாக்கு கேட்கிறார்கள்.

வன்முறை, அராஜகத்தை அரங்கேற்றியவர்கள் மீண்டும் வாக்கு கேட்கிறார்கள். அவர்கள் செய்த ஊழல்கொஞ்சமா? சென்ற ஆட்சியும் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருந்தால், நாம் அந்தமானில்தான் போய்குடியேறியிருக்க வேண்டும்.

அந்த அளவுக்கு அவர்கள் கண்ணில் பட்ட இடத்தையெல்லாம் வளைத்து வாங்கிப் போட்டார்கள். அ.தி.மு.க.கூட்டணியில் ஜெயலலிதா யாரையும் மதிப்பதில்லை. தி.மு.க கூட்டணியில் எல்லாரும் மதிக்கப்படுகிறார்கள்.

தி.மு.கவில் வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அ.தி.மு.கவில் வேட்பாளர்களின்ஜாதகம் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாய் ஒன்றின் ஜாதகம் அனுப்பியிருந்தால்கூட அதைப் பார்த்துவிட்டு சீட் கொடுத்திருப்பார் ஜெயலலிதா.

அ.தி.மு.கவினர் பணப்புழக்கம் இல்லை என்கிறார்கள். அது அவர்கள் மனப் புழக்கம். கள்ளப் பணம்தான் அதிகஅளவில் புழங்கும், நல்ல பணம் அளவோடுதான் இருக்கும்.

டி.ராஜேந்தர் (கிருஷ்ணகிரி)

பாலங்கள் போட்டது கருணாநிதி, சேலைகள் சேர்த்தது ஜெயலலிதா.

பல திட்டங்கள் கொடுத்து சிறப்பு செய்தது தி.மு.க அரசு, செருப்புகளை அடுக்கியது ஜெயலலிதா அரசு.

உழவர் சந்தையை. உருவாக்கினார் கருணாநிதி. ஊழல் சந்தை உருவாக்கினார் ஜெயலலிதா.

ஏழை வீட்டு திருமணத்துக்கு 10,000 ரூபாய் கருணாநிதி. வளர்ப்பு மகன் திருமணத்துக்கு 10 கோடி ரூபாய் செலவுசெய்தார் ஜெயலலிதா.

வரும்முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார் கருணாநிதி. வந்தவரைக்கும் சுருட்டினார் ஜெயலலிதா.கிழிஞ்சது கிருஷ்ணகிரி. ஜெயலலிதா வேட்புமனு தள்ளுபடியானது கிருஷ்ணகிரி.

இனி ஜெயலலிதா சுற்ற முடியாது கிரிகிரி. தேர்தல் சட்டப்படி வேட்புமனு தள்ளுபடி. அவங்க செல்வாக்குஆகவில்லை செல்லுபடி.

அ.தி.மு.க:

எஸ்.எஸ். சந்திரன் (காஞ்சிபுரம்)

ஜெயலலிதா முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.

அடுத்த மாதம் அவர் முதல்வர் பதவி ஏற்றதும், தொடர்ந்து 5 மாதங்கள் 29 நாட்கள் ஆட்சி செய்தபின் பதவியைராஜினாமா செய்வார்.

பிறகு மீண்டும் அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மீண்டும் 5 மாதங்கள் 29 நாட்கள் ஆட்சி செய்தபின்பதவியை ராஜினாமா செய்வார். இப்படியே 5 வருடங்களும் ஜெயலலிதாவே ஆட்சி செய்வார்.

இந்தியாவில் எங்குமே தனி நீதிமன்றங்கள் கிடையாது. கருணாநிதிதான் தனக்காகவே தனி நீதிமன்றங்களைவைத்துக் கொண்டார்.

அடுத்த மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்களும் தனி நீதிமன்றம் அமைப்போம். அதற்கு நான்தான் நீதிபதி.

எல்லா வழக்குகளிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவிப்பேன். கருணாநிதிக்க 7 ஆண்டு சிறைத் தண்டனைகொடுப்பேன்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X