For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிகவும் மந்தமான தேர்தல் பிரச்சாரம்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் ஒவ்வொரு தடவையும் நடக்கும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இந்த தடவை வெகுவாகக்குறைந்துள்ளது என்றே கூறலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் சரி. சட்டசபைத் தேர்தல் ஆனாலும் சரி.சுவர் முழுவதும் போஸ்டர்கள், கட்சி சின்னங்கள் என்று எங்கு பார்த்தாலும் தேர்தல் களை கட்டியிருக்கும்.

ஆளுயர கட் - அவுட்டுகள், அலங்கார வளைவுகளுடன், போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் கட்சி கூட்டங்கள்நடந்த வண்ணம் இருக்கும்.

ஆனால் தேர்தல் கமிஷன் போட்ட கிடுக்கிப்பிடியில் இந்தத் தேர்தலில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றனர்அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும்.

தேர்தல் ஆணையம் தேர்தல் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வேட்பாளர்களுக்குக்கட்டளையிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு விளம்பரப்பலவை கலைஞர்கள் சங்கத்தினருக்கு பெரிய அளவில்நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் 50, 000 கலைஞர்களின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 20, 000 க்கும்மேற்பட்டோர் கோடம்பாக்கம், ராயப்பேட்டை, வடபழனி ஆகிய இடங்களில் விளம்பரப்பலகைகள் தயாரிக்கும்பணியில் வருடந்தோறும் ஈடுபடுவர். இவர்கள் அனைவருக்கும் இந்தத் தேர்தலில் நயாபைசா கூட பார்க்கமுடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் தேர்தல் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படிதான்வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும். இதனால், கட்- அவுட் மற்றும் விளம்பர போர்டுகள்செய்பவர்களின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கட்- அவுட் செய்யும் சென்னையைச் சேர்ந்த பாரித் கூறுகையில், தேர்தல் நேரத்தில் தான் எங்களால் ஓரளவுசம்பாதிக்க முடியும். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் எங்களுக்குத்தான் பிரச்சனை.

தேர்தல் நேரத்தில்தான் எங்களைப் போன்ற தொழிலாளிகளுக்கு ஊதியம் கிடைக்கும். இரண்டு, மூன்றுமாதங்களுக்குத் தொடர்ந்து சாப்பாட்டு பிரச்சனை இருக்காது. ஆனால் இந்த முறை தேர்தல் ஆணையத்தின் புதியவிதிமுறைகளால் எங்களைப் போன்ற தினக்கூலி ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதே போல் மின்சார கட் - அவுட்டுகள் செய்யும் ஒருவர் ஒரு நாளுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கமுடியும்.

இந்த நேரத்தில் ஏவிஎம், எலிகன்ட் போன்ற விளம்பர நிறுவனங்கள் அதிக அளவு விளம்பரக் கலைஞர்களைப்பயன்படுத்தும். அதாவது பல கலைஞர்கள் டிஜிட்டல் லைட்டிங், கம்யூட்டர் கிராபிக்ஸ் டிசைன்கள், வினைல்போர்டுகள் ஆகியவற்றை நன்கு வடிவமைத்துக் கொடுப்பார்கள். தேர்தல் ஆணைய விதிமுறைகளால் விளம்பரக்கலைஞர்களின் பிரச்சனை விஸ்வரூபமாகிவிட்டது.

மேலும் தற்போது தமிழ்நாடில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் உள்ளன. இவைகள் 10, 000க்கும் மேற்பட்ட முழு நேர ஊழியர்களாக வைத்துள்ளன. இதனால் பகுதி நேர ஊழியர்களுக்கு பெரும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.

1999 ம் ஆண்டு தேர்தல் நடந்த போது கட் - அவுட் கலைஞர் ஒருவர் 25, 000 ரூபாய் சம்பாதித்தார். அடுத்தஇரண்டு வருடங்களில் இது போல் பணம் சம்பாதிப்பது பெரும் கடினமாகிவிட்டது.

தென் இந்திய விளம்பர பலகை தயாரிப்பு சங்கத் தலைவர் மோகன் கூறுகையில், தமிழகத்தில் புதிய படங்கள்திரைக்கு வரும்போது விளம்பரம் செய்யும் கலைஞர்களுக்கு கணிசமான அளவு பணம் கிடைக்கும். ஆனால்அவர்கள் தற்போது கம்ப்யூட்டர் சம்பந்தமான விளம்பர ஸ்டில்களையே பெரிதும் நாடுகிறார்கள். இதனாலும்எங்களது வருமானத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைகளாலும் எங்களுக்குப் பெரியபிரச்சனைதான் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X