For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் ஸ்டாரின் மெளனம் .. கலக்கத்தில் திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Rajini kanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காத்து வரும் மாபெரும் அமைதி திமுகவினரிடையே பெரும் கலக்கத்தையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ரஜினிகாந்த் விரல் சொடுக்கியதில் தமிழகமே மயங்கிப் போய், அவரதுஆணைப்படி திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிக் கனியைக் கொடுத்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியின் பிறப்புக்கு காரணமாக அமைந்தார் ரஜினி காந்த். தமிழக அரசியல்களத்தில் புதிய அரசியல் தாரகையாக உதித்தார் ரஜினிகாந்த்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு சம்பவங்களை தட்டிக் கேட்டதன் மூலம் அரசியல்முக்கியத்துவம் பெற்றார் ரஜினி காந்த். அதைத் தொடர்ந்து ரஜினி பேசிய நிகழ்ச்சியின் நாயகனாக இருந்தஅமைச்சர் ஆர்.எம். வீரப்பன் பதவி இழந்தார். இதனால் கொதிப்படைந்த ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு எதிராகபெரும் போர் தொடுக்கத் திட்டமிட்டார்.

அந்த சமயத்தில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவரும், அப்போதைய பிரதமருமானநரசிம்மராவ் முடிவு செய்தார். இதை எதிர்த்து கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைமூப்பனார் மூலம் தொடங்க வைத்தார் ரஜினி.

திமுகவுடன் கூட்டணிக்கும் மூப்பனாரை உடன்பட வைத்தார். இந்தக் கூட்டணி தமிழகத்தை பொற்காலம் காணவைக்கப் போகும் கூட்டணி என்றும் அறிவித்தார். தனது ஆசியும், ஆதரவும் இக்கூட்டணிக்கே என்று பிரகடனம்செய்தார்.

ரஜினி சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்டனர் தமிழக மக்கள். திமுக-தமாகா கூட்டணிக்கு அமோகவெற்றி கிடைத்தது. ஜெயலலிதா தேர்தலில் தோல்வி கண்டார். அவரது கட்சிக்கு 4 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது.

திடீர் சூறாவளியாக புறப்பட்டு ஜெயலலிதாவை அரசியல் கடலிலிருந்து கரைக்குத் தூக்கிப் போட்ட ரஜினி காந்த்இந்தத் தேர்தலில் அமைதியாக இருப்பது கடந்த தேர்தலில் அவரது ஆசியைப் பெற்ற திமுகவுக்கு பெரும்குழப்பமாக உள்ளது.

தேர்தல் குறித்தும், யாருக்கு தனது ஆதரவு என்பது குறித்தும் ரஜினி ஏதும் சொல்லாமல் அமைதி காப்பது ஏன் என்றகேள்வியில் உள்ளனர் திமுகவினர் முக்கியப் புள்ளிகள்.

இந்தத் தேர்தலில் ரஜினி அமைதியாக இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

  • திமுக தரப்பு மீது ரஜினி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மதிமுகவை கழற்றி விட்டது, கூட்டணி அமைக்கும் போது கட்சிகள் விஷயத்தில் திமுகவினர் நடந்து கொண்டது, மூப்பனாரை அதிமுகவுடன் சேர வாய்ப்பு அளித்து விட்டது என பல விஷயங்களில் திமுக தலைமை மீது ரஜினிக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.

  • திமுக அரசு மீது துவக்கத்தில் நல்ல பெயர் இருந்தாலும் கூட போகப் போக அவர்கள் மீது ஆங்காங்கே ஊழல் புகார்கள் கிளம்பியதும் அவருக்கு திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

  • திமுக, தமாகா கூட்டணி அமைய பாடுபட்ட சோ, இப்போது அதிமுகவுடன், தமிழ் மாநில காங்கிரஸை கூட்டு சேர்க்க கடுமையாக பாடுபட்டது, ரஜினிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அரசியலில் தாவல் சாதாரணம் என்பதை அவர் அறிவார். ஆனால் மூப்பனார் இப்படி அந்தர் பல்டி அடிப்பார் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. இதனால் தமாகா மீதும் அவர் அதிருப்தியாக உள்ளார்.

  • ரஜினியின் அரசியல் குரு என கருதப்படுபவர் சோ. எனவே, திமுக அணிக்கு சாதகமாக ஏதும் பேச வேண்டாம், அறிக்கை வேண்டாம் என்று ரஜினிக்கு அவர் அன்பு கட்டளை இட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவும் ரஜினியின் அமைதிக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

  • தேர்தல் முடிவு வரை பொறுத்திருங்கள். அப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அரசியல் கட்சி துவங்குவது அல்லது அரசியல் குறித்த உங்களது சுதந்திரமான முடிவை எடுங்கள். அதுவரை யாருக்கும் ஆதரவு என்ற நிலையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் ரஜினி நண்பர்கள் சிலர் அட்வைஸ் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் அவரது மெளனத்திற்குக் காரணமாக கூறப்படுகிறது.

    ரஜினி இப்போது தனது புதிய படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவரது புதிய படம் தமிழ், கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் தயாராகப் போகிறது.

    கடைசிப் படமாக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால், தனக்கு வாழ்வு கொடுத்த தமிழ் தவிர, பிறந்தமாநிலமான கர்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னடம், கெளரவம் கொடுத்த தெலுங்கு மற்றும் இந்திமொழிகளில் தனது படத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினி.

    மெளனம் சில நேரங்களில் தாமதத்திற்கு வழி வகுத்து விடும் என்பதால் விரைவில் வெளியே வருவார் சூப்பர்ஸ்டார் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X