• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்லாட்சி தந்தவர் கருணாநிதி .. வாஜ்பாய் பெருமிதம்

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிய பெருமை தமிழக முதல்வர் கருணாநிதிக்குத்தான் உண்டுஎன்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் உச்சகட்டமாக பிரதமர் வாஜ்பாய்திங்கள்கிழமை சென்னை வந்தார். மெரினா கடற்கரையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுகூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்டார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்வதற்ாக இரவு 7 மணியளவில் வாஜ்பாய் சென்னை வந்து சேர்ந்தார். அவரைமுதல்வர் கருணாநிதி, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி, தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் இல.கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பின்கடற்கரைக்குப் புறப்பட்டார் பிரதமர்.

லட்சக்கணக்கானோர் வாஜ்பாய் பேச்சைக் கேட்பதற்காக மெரினா சீரணி அரங்கு முன்பு குழுமியிருந்தனர்.பின்னர் மேடையில் அமர்ந்ததும் முதலில் கருணாநிதி உரையாற்றினார். தனது ஆட்சிக்காலத்தில் நடந்த வளர்ச்சித்திட்டங்களை அடுக்கி வைத்தார். அவற்றை மொழி புரியாவிட்டாலும் கூட உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் வாஜ்பாய்.

கருணாநிதி தனது பேச்சை நிறைவு செய்ததும் பிரதமர் தனது பேச்சைத் தொடங்கினார். சகோதர, சகோதரிகள்அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை அவர் தொடங்கியது கூட்டத்தினரைஉற்சாகப்படுத்தியது.

பிரதமர் தனது உரையில் கூறியதாவது:

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களில் மூத்தவர், நாணயமானவர், சிக்கல் ஏற்படுத்ததாத ஒரு தலைவர்கலைஞர் கருணாநிதி. மத்திய ஆட்சிக்கு நம்பிக்கைக் குரியவராக விளங்குகிறார். அவருடைய தலைமையில்போட்டியிடும் வேட்பாளர்களுக்காக உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சிப் பொறுப்பை காங்கிரஸ் கட்சிதான் வைத்திருந்தது.அக்கட்சி மட்டுமே தேசிய அளவில் பிரதான கட்சியாக இருந்து வந்தது. ஆனால் தனது சிறப்புத் தன்மையைஇப்போத அது இழந்து விட்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது.

கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். அவர்களுக்குஎதிர்காலமே இல்லாமல் போய் விட்டது. எனவேதான் கடந்த காலத்தை மட்டுமே அவர்கள் இப்போது பேசிவருகிறார்கள்.

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நானும், அண்ணாவும் நாடாளுமன்றத்திலேசேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். அண்ணாவின் வழியில் இப்போது கருணாநிதி செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் நல்லாட்சியைக் கொடுத்தவர் கலைஞர். இதை நான் சொல்லவில்லை.அனைத்து சமுதாய மக்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளார்கள். கருணாநிதியின் வழிகாட்டுதலில் தமிழகம்,இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக இன்று விளங்குகிறது.

தமிழகத்தின் இந்த வளர்ச்சி போதாது. இன்னும் பல வளங்களை அது பெற வேண்டும். அது நடைபெற திமுகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சிக் கட்டிலை கொடுங்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர் என்பது தெளிவாகஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர் கூட்டணியான அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்று அறிவிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முன்பு பிடிவாதம் பிடித்தது.இப்போது அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் அதிமுககூட்டணி.

திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம் என்ற நல்ல சமூக சேவகரை அந்தத் தொகுதி மக்கள் இழந்து விட்டார்கள்.அவர் விட்டுச் சென்ற பணிகள் முடிவு பெற, தொடர பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாறன் நம்பியாரை வெற்றி பெறச்செய்யுங்கள்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும். எனவே திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகளுக்குவெற்றி தேடித் தாருங்கள் என்றார் வாஜ்பாய்.

வாஜ்பாய் பேசத் தொடங்கியபோது மணி 9.30. தேர்தல் விதிப்படி 10 மணிக்கு மேல் பேசக் கூடாது. எனவேஅதற்குள் வாஜ்பாய் பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அவர் கையில் இருந்த அவரதுபேச்சுக் குறிப்பு மிகப் பெரிதாக இருந்ததால், மத்திய அமைச்சர் முரசொலி மாறன், அவற்றை வாங்கிமுக்கியமான அம்சங்களை மட்டும் பிரதமருக்கு சுட்டிக் காட்டினார். இதையடுத்து அவற்றை மட்டும் பிரதமர்வேகமாக பேசி முடித்தார்.

இதுவரை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அனைத்திலும் சரியான நேரத்தில் பேசி முடித்த முதல்வர்கருணாநிதிக்கு, வாஜ்பாய் கூட்டத்திலும் அவ்வாறே நடந்தது சந்தோஷத்தைக் கொடுத்தது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X