• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

முஸ்லிம்கள் நலனில் பாஜக திடீர் அக்கறை

By Staff
|

கோவை:

முஸ்லிம்களை காங்கிரஸ், வாக்கு வங்கியாகவே கருதுகிறது, அவர்களின் நலனில் பாரதிய ஜனதாக் கட்சி மட்டுமே அக்கறைகொண்டு அவர்களுக்குச் சலுகைகளை வழங்கி வருகிறது என அத்வானி கூறியுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு நாள் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.,மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அத்வானி,திருப்பூரில் பாரதிய ஜனதாக் கட்சி வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து பேசியதாவது:

காஷ்மீர் பிரச்னை கடந்த 50 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையை தீர்க்கமால், பிரச்னையை காங்கிரஸ் வளர்த்துவந்துள்ளது. நோய் முற்றிய நிலையில் அதைக் குணப்படுத்த சிறிது காலம் ஆகும். அங்கு தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க தேசியஜனநாயக் கூட்டணி அரசு முயன்று வருகிறது.

சிறுதொழில்கள், விவசாயம், விவசாய விளைபொருள்கள், ஆகியவற்றிற்கு இந்த அரசில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை.

தொழில்களுக்குப் பல்வேறு சலுகைகளை இதுவரை வழங்கி வந்துள்ளோம். தாரளமயமாக்கல் கொள்கையினால் நமது நாட்டிற்குஎந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காக்க, சட்டத்தின் உதவியுடனும், மக்கள் உதவியுடனும் முயற்சி மேற்கொள்வோம்.

திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழில்கள் நடக்கின்றன. இந்த தொழிலாளர்களின்நிலையையும், தொழிற்சாலைகளின் நிலைகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கையை பாரதிய ஜனதா மேற்கொள்ளும்.

கடந்த 80 ம் ஆண்டில் துவங்கப்பட்ட பாரதிய ஜனதாவில், ஒரு எம்.பி மட்டுமே இருந்தார். 84ம் ஆண்டில் 2 எம்.பிக்கள் வந்தனர்.இப்போது 161 எம்.பிக்கள் உள்ளனர். கடின உழைப்பாலும் மக்களின் ஆதரவாலும் கட்சி வளர்ந்துள்ளது.

பாரதிய ஜனதாகட்சியின் அணுகுமுறையால் பல்வேறு கட்சிகள் ஒன்றாக இணைந்து வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைதொடங்கியுள்ளோம். இத்தகைய வெற்றியின் ரகசியம், நம்பகத்தன்மையே.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்த நிலையிலும் கூட அதனை சீர்தூக்கி நிறுத்தியுள்ளது பா.ஜ அரசு. பொக்ரான் வெடிகுண்டுசம்பவத்தின்போது இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

குஜராத்தில் கடும் வறட்சி, பூகம்பம் ஏற்பட்டது. ஒரிசாவில் புயல் தாக்கி கடும் சேதத்தை விளைவித்தது. இவற்றையெல்லாம்கடந்து இப்போதும் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் வெற்றி கண்டு வருகிறது. அதற்கு நமது நிதியமச்ைசர் யஷ்வந்த் சின்காவின்தீவிரவமான அணுகுமுறை தான் காரணம்.

இந்தியாவில் விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் கிறித்தவர்களும்., பார்சிய இனத்தவர்களும் கூட அதிகம் பேர் உள்ளனர்.ஆனால் இந்த துறைகளின் முஸ்லிம்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.

இந்தேனேஷியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். இவ்வளவு நாளாக காங்கிரஸ் அரசுஅவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளது.

அவர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவர்களின் நலனில் அக்கறை செலுத்தி முன்னேறச்செய்துள்ளது.

தமிழகத்தில் நல்ல ஆட்சி நடந்துள்ளது. இந்த ஆட்சி தொடர கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க வேண்டுகிறேன் என்றார் அத்வானி.

இந்த பொதுக் கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலர் இல.கணேசன், வர்த்தக அணித் தலைவர் சேகர், உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து, திருப்பூர் பா.ஜ வேட்பாளர் லலிதாகுமாரமங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X