கவர்னர் கையில் ஜெ.யின் எதிர்காலம்
டெல்லி:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்று விட்டால், அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா முதல்வராக முடியுமா என்பதை தமிழக கவர்னர் பாத்திமா பீவிதான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசியல்பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் சுபாஷ் காஷ்யாப் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூஷன் ஆகியோர்கூறியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்காத ஒருவர்முதலமைச்சர் ஆகும் தகுதியை இழக்கிறார் என்றனர்.
சுபாஷ் கூறுகையில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு கட்சியின் தலைவர், அவரது கட்சி அதிக இடங்கள் பெற்றுஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் அவர் முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது. அவரை முதல்வர் பதவி ஏற்க அழைப்பதும்,அழைக்காமல் இருப்பதும் சம்பந்தப்பட்ட மாநில கவர்னர் கையில்தான் உள்ளது.
ஆனால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு அரசியல் கட்சித் தலைவரை இந்திய அரசியல் சட்டப்படி, அவரது கட்சிபெரும்பான்மை இடங்கள் பெற்று வெற்றி பெற்றாலும் முதல்வராகப் பதவியேற்க அழைக்கக் கூடாது. அது தவறானவழிகாட்டுதல்.
எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.யாகவோ இல்லாத ஒருவர் முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ பதவியேற்கசட்டத்தில் இடமில்லை.
ஜெயலலிதா விஷயத்தில் அவர் தேர்தலில் போட்டியிடவே தகுதி இழந்துள்ளார். தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாத ஒருவர்முதல்வராக ஆகவே முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாத ஒருவர் எப்படி பிரதமராக முடியும்? அதே போல் தான் சட்டசபைத் தேர்தலில்போட்டியிட அனுமதி இல்லாத ஒருவர் முதல்வராக முடியாது என்றார்.
இதற்கிடையே, தமிழக கவர்னர் பாத்திமா பீவி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். இவர் ஏற்கனவே ஜெயலலிதாமுதல்வராக முடியுமா கூடாதா என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளார் என்று நம்பப்படுகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கையில், இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்உள்ளதாகத் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்புக்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் ஜெயலலிதா கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் நான் தான் முதலமைச்சர் ஆவேன் என்று கூறி வருகிறார்.
ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள், அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதல்வராக வாய்ப்புக்கள் உள்ளது.குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அவர் முதல்வராக இருப்பார் என்று திடமாக நம்புகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications