இந்தியாவில் ஆணுறைகளுக்குப் பஞ்சம்
நியூயார்க்:
குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்குத் தேவையான ஆணுறைகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகஐ.நா.சபை கூறியது.
பல நாடுகளிலும் குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள், ஆணுறைகள்ஆகியவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அது கூறியது.
அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு இந்தத் தட்டுப்பாடு நீடிக்கும் என்று இஸ்தான்புல்லில் நடந்த ஐ.நா. சபைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டுக்கு மட்டுமில்லாமல் எய்ட்ஸ் உள்ளிட்ட பல செக்ஸ் வியாதிகளுக்கும் தேவைப்படும்ஆணுறைகள் கிடைப்பது குறைந்துகொண்டே வருகிறது.
இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு குவாட்டிமாலா, நிகராகுவா, காமரூன், ஹெய்ட்டி உள்பட 8 நாடுகள் குடும்பக்கட்டுப்பாட்டுக்குத் தேவையான உதவிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
கென்யா, பொலிவியா, பிலிப்பைன்ஸ், ஜிம்பாப்வே, கானா, பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இன்னும் 8முதல் 10 ஆண்டுகள் வரை இதற்கான உதவி தேவைப்படும்.
அதேபோல, இந்தியா, மெக்சிகோ, வியட்நாம், துருக்கி, பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகளுக்கோ இன்னும் 3 முதல் 8ஆண்டுகள் வரைதான் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான உதவிகள் தேவைப்படுகின்றன.
இதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு அனைத்து அரசுகளும் ஐ.நாஅதிகரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளுக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஆணுறைகளைவழங்குவதற்காகப் பல தொண்டு அமைப்புகளுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!