பாண்டிச்சேரி தேர்தல் தோல்வியால் துவளவில்லை: ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை.தோல்வி கண்டு தொண்டர்கள் வருந்த வேண்டாம் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக, பாண்டிச்சேரி சட்டசபைகளில் தமிழகத்தில் போட்டியிட்ட 27 தொகுதிகளில் 20தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது.
பாண்டிச்சேரியில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துபோட்டியிட்டது பா.ம.க. தேர்தலில் அ.தி.மு.க 20 இடங்களிலும் பா.ம.க 10 இடங்களிலும் போட்டியிட்டது.
ராமதாஸ் பாண்டிச்சேரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீதிவீதியாக, வீடுவீடாக சென்று ஆதரவு திரட்டினார்.ஆனால் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை.
திண்டிவனத்தில் இருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.கபாண்டிச்சேரி தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது.
அப்போது ராமதாஸ் பேசுகையில், பாண்டிச்சேரி தேர்தல் தோல்வியால் நான் துவண்டு போய்விடவில்லை.பாண்டிச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 3 வன்னியரும், 1 மீனவரும் மட்டுமே வெற்றி பெற்று சட்டடபைக்குசென்றுள்ளனர்.
சென்ற முறை 9 வன்னியர்கள் சட்டசபையில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் குறைந்து விட்டது.
வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டியும், பாண்டிச்சேரி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை.
இதே போன்ற பிரச்சாரத்தில் தமிழகத்தில் ஈடுபட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம்.
தோல்வி கண்டு யாரும் சோர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபடுங்கள். தோல்வியைபடிக்கட்டுகளாக்கி மக்களுக்காக உழைத்து கட்சியின் எதிர்கால வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications