For Quick Alerts
For Daily Alerts
-முதல்வர் ஜெயலலிதா- பாண்டி.முதல்வர் சந்திப்பு
பாண்டிச்சேரி:
சென்னை வந்துள்ள பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் திங்கள்கிழமை காலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைஅவரது போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்துப் பேசினார்.
இவர்களது சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. இந்தச் சந்திப்பின் போது அவர்கள் பேசிய விவரங்கள்எதுவும் வெளியிடப்படவில்லை.
பாண்டிச்சேரி முதல்வராக சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு அவர், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவது இதுவேமுதல்முறை.
முன்னதாக பாண்டிச்சேரியில் அமையுள்ள காங்கிரஸ் அமைச்சரவைக்கு அதிமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கஒத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பிறகு சண்முகம் ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!