For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலக்கத்தில் திமுக

By Staff
Google Oneindia Tamil News

Jayalalithaஅதிமுக பழி வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது என்கிறது திமுக.

நீங்கள் கடந்த ஆட்சியில் வாய் கிழிய சொன்ன மாதிரி சட்டம் தன் கடமையை செய்கிறது என்று பதிலடி தருகிறதுஅதிமுக தரப்பு.

மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அன்று மாலையே திமுகஆட்சியை விட்டு அகன்றது, அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 14-ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.

அன்றே திமுகவுக்கு கிலி பிடித்துவிட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்த 3 நாட்களிலேயே திமுகவினருக்கு எதிரான நடவடிக்கைகள் துவங்கி விட்டன. முதல் பலிபரிதி இளம்வழுதி.

திமுகவினருக்கு எதிராக இதுவரை நடந்துள்ள நிகழ்ச்சிகள்...

1.மே- 17: எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார். எழும்பூர் தொகுதியில் தேர்தலின்போது அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியனின் தேர்தல் ஏஜென்டைத் தாக்கியதாக பரிதி மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார் பரிதி.

2.மே- 26: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜ் கைது செய்யப்பட்டார். இரும்பு வியாபாரியிடம் மாமூல் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டியதாக அவர் மீது போலீஸில் புகார்.

3.மே- 28: முன்னாள் திமுக எம்.பி. பரசுராமன் கைது செய்யப்பட்டார். பொதுப்பணித்துறை காண்டிராக்டரை மிரட்டி ரூ. 1 கோடி கேட்டு கடத்தியதாக அவர் மீது போலீஸில் புகார். பரசுராமன் தவிர சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருட்டிணன் ஆகியோர் மீதும் வழக்கு.

4.மே- 28: பரிதி இளம்வழுதி மீது மேலும் 2 புதிய வழக்குகள் தொடுக்கப்பட்டன. பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், சென்னை சேத்துப்பட்டில் இரண்டு பேரைத் தாக்கியதாகவும் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

5.மே- 29: திமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதன் நடத்தும் பொழுதுபோக்கு விடுதியில் திடீர் சோதனை. இரவு நேரத்தில் கிளப்பை நடத்தியதாக ரங்கநாதன் மீது வழக்கு. ரங்கநாதன் கோர்ட்டில் ஆஜராகி விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Karunanidhiஇது எல்லாம் ஒரு முன்னோட்டம் என்பது மாதிரி என்று தான் தெரிகிறது. கடந்த ஆட்சியில் இலைமறைகாயாகநடந்த ஊழல்கள் தொடர்பான பைல்களை ஜெயலலிதாவும் அவருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் தோண்ட ஆரம்பித்துவிட்டனர்.

முக்கியமாக தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடுவென உயர்ந்து குறித்த விவகாரத்தை ஜெயலலிதா கையில்எடுத்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் திமுகவின் மிக மிக முக்கிய புள்ளிசிமெண்ட் ஆலைகளை வளைத்துப் போட்டிப்பதாக அரசல்புரசலாகக் கூறப்பட்டு வருகிறது. இவர் தான்இந்தியாவிலேயே சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார் என்று கூட கூறப்படுகிறது.

இவர் மீது விரைவிலேயே நடவடிக்கை வரும் என்று தெரிகிறது. நேரடியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதுதாக்குதல் தொடுக்காமல் அவருக்கு நெருக்கமானவர்களை வாட்டி எடுத்து கருணாநிதிக்கு இன்-டைரக்ட் தலைவலிகொடுப்பது தான் இப்போதைய வியூகம் என்று தோன்றுகிறது.

அதன்படி விரைவிலேயே அவரது குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமான தலைவர்கள், கட்சியின் முக்கியத்தலைவர்கள் ஆகியோர் மீது சட்டம் பாயலாம்.

இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதிக்க அவரச அவசரமாக கட்சியின் பொதுக் குழுவைகூட்டியுள்ளது திமுக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X