மாஜி மந்திரி மகனுக்கு அடி: திமுகவினர் மீது வழக்கு
அரூர்:
முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் மகன் கரிகால் வளவனை தாக்கியது தொடர்பாக திமுகவினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தின் போது அமைச்சராக இருந்தவர் முல்லைவேந்தன். இவரது மகன் கரிகால் வளவன் (வயது17).
வளவன் தர்மபுரியில் உள்ள கம்பையாநல்லூருக்கு ஜீப்பில் சென்று விட்டு மீண்டும் அரூருக்கு வந்துகொண்டிருந்தார்.
அவரது காரைப் பின்தொடர்ந்து இன்னொரு டாடா சுமோ வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பின்பு டாடா சுமோவிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், கரிகால்வளவன் வந்த ஜீப்பை நிறுத்தி அவரை கீழே தள்ளிசராமரியாகத் தாக்கினார்கள்.
அந்தக் கும்பல் கரிகால் வளவன் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியையும், ரூ 25 ஆயிரம்ரொக்கப்பணத்தையும் பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்று விட்டார்கள். இந்தத் தாக்குதலில் ஜீப் டிரைவர்மன்சூரும் காயமடைந்தார்.
திமுகவினர் மீது வழக்கு:
கரிகால் வளவன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.இதையடுத்து இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாக கம்பையநல்லூரைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் சென்னகிருஷ்ணன், ரவிக்குமார், துரை உள்பட 15 வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
முல்லைவேந்தன் முதல்வருக்குக் கடிதம்:
இதுகுறித்து முல்லைவேந்தன் முதல்வருக்கும், கவர்னர் பாத்திமா பீவிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவரதுகடிதத்தில், என்னைத் தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவினர் செயல்படுகின்றனர். அவர்கள் என் மகன்வளவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். திமுகவினரின் அராஜகப்போக்கை கண்டிக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தச் சம்பவம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications