போலி பட்டா: திமுக பஞ்சாயத்து தலைவர் கைது
நீலாங்கரை (ஆலந்தூர்):
இலவச பட்டா தருவதாகக் கூறி மோசடி செய்த திமுக பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை அருகேயுள்ள நீலாங்கரை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர்எட்டியப்பன். இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவரும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ரவி, மன்ற உறுப்பினர்கள்வெங்கட்ராமன், எஸ்.கே.ரவி ஆகியோர் சேர்ந்து நீலாங்கரை பாரதியார் நகர் பகுதியில் உள்ள சுமார் 500வீடுகளுக்கு இலவச மனை பட்டா வாங்கித் தருவதாகக் கூறினர்.
இதற்காக ஒரு வீட்டுக்கு ரூ 1, 500 வசூல் செய்தனர். பணம் வாங்கி பல நாட்கள் ஆகிய பின்னும் மனைப்பட்டாக்கள் கொடுக்கவில்லை.
இதனால் கலவரமடைந்த மக்கள் எட்டியப்பன் வீட்டுக்குச் சென்று மனை பட்டா கொடுக்கும்படி கேட்டனர். ஆனால்எட்டியப்பனும், சில கவுன்சிலர்களும் சேர்ந்து பொதுமக்கள் அனைவரையும் மிரட்டி அனுப்பி விட்டனர்.
இதையடுத்து பாரதியார் நகர் ராகவன் என்பவர் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ஊராட்சிமன்ற தலைவர் எட்டியப்பன், துணைத்தலைவர் ரவி, கவுன்சிலர்கள் வெங்கட்ராமன், எஸ்.கே.ரவிஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் கைது எட்டியப்பன் செய்யப்பட்டதை எதிர்த்து நீலாங்கரையில் திமுகவினர் கல்வீச்சுநடத்தினர். எட்டியப்பன் கைது செய்யப்பட்டதற்கு சென்னை தாம்பரம தொகுதி திமுக உறுப்பினர் வைத்தியலிங்கம்கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!