வாஜ்பாய் ஆபரேஷன் வெற்றி
மும்பை:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு வியாழக்கிழமை மூட்டு மாற்று அறுவை சிகிச்சைவெற்றிகரமாக நடந்து முடிந்தது.
கடந்த வருடம் வாஜ்பாய்க்கு இதே மருத்துவமனையில் இடது காலில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சித்தரஞ்சன்ரனவதேவே இந்த முறையும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். இவருடன் மும்பை மற்றும்அமெரிக்க டாக்டர்கள் குழுவும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
முன்னதாக பிரதமர் வாஜ்பாய் ஜூன் 6 ம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மும்பை வந்தார். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் தொடர்ந்து 10 நாட்கள்தங்கியிருப்பார் வாஜ்பாய்.
அப்போது அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை செய்திகள்தெரிவிக்கின்றன.
பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை நடப்பதையொட்டி ப்ரீச் கேன்டி மருத்துவமனை முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை விவரம்:
75 வயதான பிரதமர் வாஜ்பாய்க்கு ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை சுமார் 60 நிமிடங்கள்அறுவை சிகிச்சை நடந்தது. காலை 10 மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது.
அறுவை சிகிச்சை முடிந்ததும் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் உள்ள 7 வது மாடியறைக்கு மாற்றப்பட்டார்.
ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் கூறுகையில், பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவைசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
வழக்கம்போல் காலை 6.30 மணிக்கு எழுந்த வாஜ்பாய் முதலில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அறுவை சிகிச்சைவார்டுக்கு பிரதமர் 8.30க்குக் கொண்டு செல்லப்பட்டார். அறுவை சிகிச்சை அரை மணி கழித்து 9 மணிக்குத்தொடங்கியது. சரியாக 10 மணிக்கு முடிந்தது.
அறுவை சிகிச்சை வார்டுக்குச் செல்லுமுன், வாஜ்பாய் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். அப்போதுடாக்டர்களும், சக அமைச்சர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர். வாஜ்பாய்க்கு வயது அதிகமாக ஆகி விட்டதால்இரண்டு கால்களிலும் அடிக்கடி வலி ஏற்படுகிறது என்றார் அவர்.
சிறப்பு பிரார்த்தனை:
பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவைசிகிச்சை நடப்பதையொட்டி மும்பையில் உள்ள கால்பா தேவி கோவில் உள்பட பலகோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், பூஜைகள் நடந்தன. ஏழை மக்களுக்கு இனிப்பு பொட்டலங்கள்வழங்கப்பட்டன.
யு.என்.ஐ.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications