For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜகுடும்ப படுகொலைக்கு திபேந்திராதான் காரணம்

By Staff
Google Oneindia Tamil News

காட்மாண்டு:

நேபாள அரசர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட அரசர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் படுகொலைசெய்யப்பட்டதற்கு பட்டத்து இளவரசர் திபேந்திராதான் காரணம் என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேபாள அரண்மனையில் நடந்த இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த டாக்டர்ராஜீவ் ஷாகி, இந்தப் படுகொலையை செய்தது திபேந்திராதான் செய்தார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இவரும்ராஜ குடும்பத்துக்கு நெருங்கிய உறவினரே.

இளவரசர் திபேந்திரா துப்பாக்கியால் சுட்டபோது ராஜீவும் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றஅவர் இப்போது உடல்நலம் தேறி வருகிறார். இவர் மறைந்த அரசர் பீரேந்திராவின் சகோதரர் தீரேந்திராவின்மருமகன் ஆவார்.

டிஸ்கோத்தேவுக்கு சென்றார்:

இவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அரண்மனையில் விருந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது திபேந்திரா அரண்மனைக்கு வரவில்லை. விருந்து ஆரம்பித்து சிறிது நேரம் கழித்தேவந்தார். அதற்குமுன் அவர் தனது காதலி தேவயானியுடன் சேர்ந்து டிஸ்கோத்தேவுக்குச் சென்றிருந்தார்.

அவர் அரண்மனைக்குத் திரும்பியபோது நன்கு குடித்திருந்தார். அவரை நாங்கள்தான் கைத்தாங்கலாக அவரதுஅறைக்கு அழைத்துச் சென்றோம்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர் விருந்து நடக்கும் அறைக்கு வந்தார். பின்னர் அரசரை நோக்கித் துப்பாக்கியால்சுட்டார்.

கொலைவெறியுடன் தனது அறைக்குச் சென்று மீண்டும் வெளியே வந்து கூடியிருந்த உறவினர்களை நோக்கிசராமரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.

பின்னர் விருந்து நடந்த அறையை ஒட்டியுள்ள பூங்காவுக்குச் சென்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.திபேந்திரா அளவுக்கதிகமாகக் குடித்திருந்த காரணத்தால்தான் அவர் கண்மூடித்தனமாக அனைவரையும் சுட்டுவிட்டார். அவரிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன.

இந்தச் சம்பவம் சரியாக இரவு 9 மணிக்கு நடந்தது. முதலில் அரசர் பீரேந்திராதான் உயிரிழந்தார். அவருக்குஉடம்பில் பல இடங்களில் குண்டுக்காயம் ஏற்பட்டது.

ஒரு டாக்டர் என்ற முறையில் நான், அரசரை நோக்கி சுட ஆரம்பித்ததும் நான் அரசரை நோக்கி ஓடினேன். அவர்உடம்பிலிருந்தும், கழுத்திலிருந்தும் தொடர்ந்து ரத்தம் வெளியாகிக் கொண்டிருந்தது.

பின்னர் திபேந்திரா அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டு மீண்டும் உள்ளே புகுந்து சராமரியாகச் சுடஆரம்பித்தார் என்றார்.

இருப்பினும் அவர், இளவரசர் திபேந்திரா தனது காதலி தேவயானியை மணம்புரிவதற்கு பெற்றோர்கள் தடையாகஇருந்த காரணத்தால்தான் குடும்பத்தையே கூண்டோடு அழித்து விட்டார் என்று பத்திரிக்கைகளில் வெளியானசெய்தியை உறுதிப்படுத்தவில்லை.

புலன்விசாரணை:

ராஜ குடும்பத்தில் நடந்த இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து நீண்ட விசாரணை நடத்த வேண்டும் என்றுஅரசியல் தலைவர்கள், பத்திரிக்கைகள் உள்பட பல துறையில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

அதே போல் தலைமை நீதிபதி கேசவ் பிரசாத் உபாத்யாயா தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X