திருச்சி மாணவி ஏகம்மை மாநிலத்தில் முதலிடம்
திருச்சி:
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் திருச்சி சாவித்திரி வித்யாசாலா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏகம்மை மாநிலத்தில்முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலைவெளியிடப்படுகிறது.
மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பாராட்டிப் பேசுகிறார்.
மாநிலத்தில் முதலிடம்:
திருச்சி சாவித்ரி வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
இவரது தந்தை பெரியண்ணன் (56) சினிமா பட விநியோகஸ்தர். திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில்தெருவில் வசித்து வரும் ஏகம்மை மாநிலத்திலேயே முதலிடம் பெற்றது குறித்துக் கூறியதாவது:
மாவட்டத்தில் முதலிடம் பெறுவேன் என்று நம்பியிருந்தேன். ஆனால் மாநிலத்திலேயே முதலிடம் கிடைத்ததுமிகவும் சந்தோஷமாக உள்ளது. இதற்காகப் பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்.
தினமும் காலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் படித்தேன்.அதற்கு பலன் கிடைத்து விட்டது.
டாக்டராகி ஏழை, எளியவர்களுக்கு உதவுவதே எனது குறிக்கோளாகும் என்றார். இவர் 6 ம் வகுப்பு முதல்தொடர்ந்து அனைத்து தேர்விலும் முதலிடம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகம்மை மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளதற்கு பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி பாராட்டுதெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications