திமுக எம்.எல்.ஏ. கைது: போலீஸ் கமிஷ்னருக்கு நோட்டீஸ்
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கிற்குப் பதில் தருமாறு சென்னை மாநகரப்போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது, சென்னை எழும்பூர் தொகுதியில் ஜான்பாண்டியன் கோஷ்டிக்கும் பரிதி இளம்வழுதி கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜான் பாண்டியனின் ஏஜெண்டு ஒருவரைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்து, மே 17ம் தேதி அவரைக் கைது செய்தனர்.
ஆனாலும், கடந்த மே 22ம் தேதி பரிதியை ஜாமீனில் விடுதலை செய்யும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஜாமீன்விடுதலை தீர்ப்பை எதிர்த்து, போலீஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மே 28ம் தேதிவரை ஜாமீனுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பின்னர் கடந்த 31ம் தேதி பரிதி ஜாமீனில் விடுதலை ஆனார். அவர் வெளியே வந்ததும், தவறான தகவலைபோலீஸார் உயர் நீதிமன்றத்துக்குக் கொடுத்ததால், தேவையில்லாமல் பல நாட்கள் ஜெயிலில் இருக்கவேண்டியநிலை ஏற்பட்டுவிட்டது என்றும், இதனால் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேந்திரகுமார் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார்.
வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் குழு, இதுகுறித்து இன்னும் 4 வாரங்களில் பதில் தருமாறு முத்துக்கருப்பன்,ராஜேந்திரகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications