சட்டப்படிப்புக்கு சட்ட மாணவர்கள் எதிர்ப்பு
கோவை:
அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பைத் தொடங்குவதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ளசட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், சட்டப் படிப்பைத் துவங்க கடந்த 3 ஆண்டுகளாக முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் இதற்குக்கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், இப்பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பு துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும்,தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி துவங்க வேண்டும் எனில், அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகமோ இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை எனவாதிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்னைக்கு முடிவு இன்னும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் இப்பிரச்னையை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜம்மாள் தேவதாஸ்தொடங்கியுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விரைவில் இங்கு சட்டப் படிப்பைத் துவங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போதுள்ள மாநில அரசு இதற்குஉதவும் எனக் கருதுகிறோம்.
மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக செவிலியர் பட்டப் படிப்புத் துவங்க முடிவு செய்துள்ளோம்.
இப் பல்கலைக் கழகத்தில் தற்போது 4,500 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இன்ஜினியரிங் கல்லூரியில்புதிதாக பி.இ. சுற்றுச் சூழல் இன்ஜினியரிங், பி.இ. இன்பர்மேஷன் டெக்னாலஜி, எனர்ஜி சயின்ஸ் ஆகிய பாடங்கள்துவங்கப்படும். எம்.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பிற்கும் அனுமதி கோரியுள்ளோம்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன், ரூ.4.25 லட்சம் செலவில் பல்கலைக்குப் புதிய கட்டடங்கள்கட்டப்படும். மேலும், இங்கு ரூ.2.8 லட்சம் செலவில் யோக மையம் செயல்படுத்தப்படும் என்றார் ராஜம்மாள்தேவதாஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications