ஏழை தம்பதியருக்கு அரசு வேலை: ஜெ. உத்தரவு
சென்னை:
வறுமையில் வாடுவதாக மனு கொடுத்த தம்பதிகளுக்கு நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர்ஜெயலலிதா.
இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் தீவிரமாக , கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் கப்பலூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தான், மனைவியுடனும், கைக் குழந்தையுடனும் வறுமையில்வாடுவதாகவும், தனக்கு உறவினர் யாரும் இல்லை எனவும், தனக்கு உதவுமாறும் மனு கொடுத்திருந்தார்.
கணேசனின் மனுவை பரிசீலனை செய்து, கருணை அடிப்படையில் கணேசனுகுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ 10,000வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
கணேசனுக்கு மதுரை கள்ளிக்குடியிலிருக்கும் மகாத்மா காந்தி சத்துணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவுசங்கத்தில் கணக்கர் வேலையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கணேசனின் மனைவி ஜரினாவுக்கு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பணி நியமனத்துக்கான ஆணை, உதவித் தொகை ஆகியவற்றை ஜெயலலிதா வியாழக்கிழமை காலை கணேசனிடமும், அவரதுமனைவியிடமும் நேரில் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications