விடுதலை சிறுத்தைகள் பந்த்: பஸ்கள் உடைப்பு- நூற்றுக்கணக்கானோர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநிலப் பொருளாளர் முடக்கத்தான் பாண்டி செவ்வாய்க்கிழமை படுகொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து, அவ்வமைப்பு வெள்ளிக்கிழமை நடத்திய "பந்த் தில் மாநிலம் முழுவதும் பல பஸ்கள்உடைக்கப்பட்டன.

இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசு பஸ்கள்மீது கல்வீசியது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மீண்டும் வன்முறை தலைதூக்கும்அச்சத்தில் தமிழகம் உள்ளது.

திருமாவளவன் கைது:

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் வியாழக்கிழமையே கைது செய்யப்பட்டு, சிறையில்வைக்கப்பட்டார். அவருக்கு ஜூலை 5ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போலவே, மாநிலத்தில்உள்ள விடுதலைச் சிறுத்தை அமைப்பின் மாவட்ட நிர்வாகிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவியாழக்கிழமையே கைது செய்யப்பட்டு விட்டனர்.

இந்த அமைப்பினர் தவிர, பல திமுக உறுப்பினர்களும் மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை "பந்த்" தொடங்கியது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்குவந்த பிறகு நடந்துள்ள முதல் "பந்த்" இதுதான்.

ஆனாலும், இந்த "பந்த்"தை யாரும் மதிக்கவில்லை. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள்கூட இதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

மதுரையில் அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. அலுவலகங்களும், பள்ளிகளும் வழக்கம் போலவே இயங்கின.இருந்த போதிலும், மதுரையில் அரசு பஸ்களைச் சேதப்படுத்தியதற்காக, வெள்ளிக்கிழமை காலை 4 விடுதலைச்சிறுத்தை அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கடலூரில் பதட்டம்:

மேலும், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இந்த மாவட்டங்களில்,விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நடத்திய கல் வீச்சில் ஏராளமான அரசு பஸ்கள் சேதமடைந்தன.

கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 210 விடுதலைச் சிறுத்தைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். லூர் மாவட்டத்தில் பல அரசு பஸ்களும் கல் வீச்சில் சேதமடைந்தன. இங்கும் சுமார் 90விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார் குவிப்பு:

இதனால், மாநிலத்தில் தலித் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

முன்விரோதம் காரணமாகத்தான் முடக்கத்தான் பாண்டி கொலை செய்யப்பட்டார் என்று போலீஸ் கூறினாலும்,இந்தக் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்றும், வன்னியர் சமூகத்தினர்தான் இக்கொலைக்குக் காரணம்என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

நிவாரண உதவி:

இதற்கிடையே, பாண்டியின் மனைவிக்கு அரசு பெண்கள் விடுதில் சமையல் வேலையும், ரூ.1,50,000 நிவாரணத்தொகையும் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும் ஏன் "பந்த்" நடத்த வேண்டும்என்றுதான் அரசு குழம்பிக் கொண்டிருக்கிறது.

பீதியில் தமிழக மக்கள்:

கடந்த வாரம்தான் கிருஷ்ணகிரியில் பெரும் கலவரம் மூண்டது. இக்கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க,போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். இந்த வன்முறைக்கும் தற்போது "இனச்சாயம்" பூசப்பட்டுள்ளது. தலித் மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டைதான், இந்தக்கலவரத்தில் போய் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

வன்னியர்களின் அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியும், தலித் மக்களின் விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பும், தமிழகத்தில் மீண்டும் ஒரு இனக் கலவரத்தைக் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சம் தமிழக மக்கள்மனதில் ஏற்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி நிலவரம்:

தமிழக "பந்த்" பாண்டிச்சேரியிலும் எதிரொலித்தது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைக் கைது செய்ததைஎதிர்த்து, இங்கு தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல்பஸ் போக்குவரத்து முழுமையாக நின்றது. கடலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலைக்கு இங்கிருந்து எந்தபஸ்ஸும் போகவில்லை. பாண்டிச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்., யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+