கல்லூரி ஆசிரியர் டிரான்ஸ்பர்: ஜூன் 26ல் கவுன்சலிங்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி ஆசிரியர்கள் டிரான்ஸ்பருக்கான கவுன்சலிங் ஜூன் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் எம். அனந்த நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 26: மதுரை அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும் கவுன்சலிங்கிற்கு, மதுரை மற்றும்திருநெல்வேலி மண்டல அரசுக் கல்லூரிகளுக்கு டிரான்ஸ்பர் கேட்டுள்ளவர்கள் வர வேண்டும்.
ஜூன் 27: திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் நடக்கும் கவுன்சிலிங்கில், திருச்சி மண்டல அரசுக் கல்லூரிகளுக்கு டிரான்ஸ்பர்கேட்டவர்கள் வர வேண்டும்.
ஜூன் 28: கோயம்புத்தூர் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் கவுன்சலிங் நடக்கும். கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ளஅரசுக் கல்லூரிகளுக்கு டிரான்ஸ்பர் கேட்ட ஆசிரியர்கள் இங்கு வர வேண்டும்.
ஜூன் 29: சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் டிரான்ஸ்பர் கேட்டுள்ள ஆசிரியர்கள், சென்னை வெலிங்டன் சீமாட்டிகல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு வர வேண்டும்.
ஜூன் 30: கவுன்சிலிங்கால் ஏற்படக்கூடிய காலி இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் சென்னையில் நடக்கும். ஏற்கனவேகவுன்சலிங்கிற்கு வந்தவர்கள் மட்டும் இதற்கு வர முடியும்.
காலை 9 மணிக்கு அனைத்து கவுன்சலிங்கும் ஆரம்பமாகும். டிரான்ஸ்பர் விண்ணப்பம், கணவர், மனைவி பணிபுரிபவராயின்அதற்கான சான்றிதழ், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், உடல் ஊனமுற்றவராகஇருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றுடன், இவற்றிற்கான நகல்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications