அமெரிக்கா: குழந்தைகளை கொன்ற தாய்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், தன்னுடைய 4 குழந்தைகளைக் கொன்ற ஒரு பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தக் குழந்தைகளுக்கு அரை வயதிலிருந்து 5 வயது வரைதான் ஆகி இருந்தன. ஏட்ஸ் என்ற அந்தப் பெண், தன்னுடையஇக்குழந்தைகளை ஒவ்வொருவராக பாத் டப்பில் உள்ள தண்ணீரில் அழுத்தியே கொன்றிருக்கிறார்.
ஏட்ஸ் ஏன் தன்னுடைய குழந்தைகளையே கொல்ல வேண்டும்? இந்தக் கேள்வியே அனைவரையும் துளைத்தெடுத்தது.இக்கேள்விக்கான விடையையும் அந்தப் பெண்ணுடைய கணவரே தெளிவாகச் சொல்லியும் விட்டார்.
"போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்" என்ற மன நோய்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று ஏட்ஸின் கணவர் சொன்னார். இதற்குமுன்பே, பல தடவை இந்த மன நோயால் ஏட்ஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அது என்னவோ, நிறையக் குழந்தைகளை மொத்தமாகப் பார்க்கும் போதுதான் இத்தகைய சைக்கோ வியாதி திடீரென்றுதோன்றுமாம். அப்போது ஏற்படும் கொடூர நினைப்புகளே கொலை வரை கொண்டு வந்து விடும் நிலையில், தாம் என்னசெய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாதாம்.
குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, அவர்களுக்குச் சாப்பாடு ஊட்டி விடுவது மற்றும் அந்தக் குழந்தைகளின் அனைத்துநடவடிக்கைகளையும் கவனித்துக் கொள்வது என்று அவர்களுக்காகச் செலவிடுவதற்குள்ளாகவே ஒரு நாளின் முக்கால்வாசி ஓடிப்போய் விடுகிறது. ஏட்ஸிற்குத்தான் இந்த நிலை.
இதுதவிர, தன்னுடைய தந்தையைக் கவனிக்க வேண்டிய வேலையும் ஏட்ஸிற்கு நேர்ந்துள்ளது. தனக்கென்று கொஞ்சம்கூட நேரம்ஒதுக்க முடியாத நிலையும் ஏட்ஸிற்கு.
இப்படி ஒரு நிலையில்தான், ஒரு பெண்ணுக்கு இத்தகைய சைக்கோ நோய் வந்து ஆட்டிப் படைக்குமாம். திரும்பத் திரும்பகுழந்தைகளையே பார்த்துப் பார்த்து, ஒரு எல்லையைத் தாண்டியவுடன், குழந்தைகளைக் கண்டாலே கடுப்பாகிப் போய்விடும்என்று கூறுகிறார் ஒரு மனநோய் மருத்துவர்.
ஏட்ஸுக்கும் அந்த நோய் ஒட்டிக் கொண்டது. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னரே இத்தகைய சைக்கோ நோய்ஏட்ஸிற்கு இருந்ததாகக் கூறப்பட்டாலும், ஏட்ஸின் தாய் அதை மறுத்துவிட்டார்.
தன்னுடைய கடைசிக் குழந்தையைப் பெற்றபோது கூட, ஏட்ஸ் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டுதான் இருந்தாராம். இருந்தாலும்,கொஞ்ச நேரத்திலேயே அவருக்குச் சரியாகி விட்டது என்று ஏட்ஸின் கணவர் கூறினார்.
குழந்தைகளைக் கொன்ற அன்றும் கூட, இறந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து வரிசையாகப் படுக்கையில்போட்டுவிட்டு, ஏதோ அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பது போல, அந்தப் படுக்கையிலேயே அமைதியாக உட்கார்ந்துள்ளார்.
போலீஸார் வந்து கேட்ட போது கூட, தன்னுடைய குற்றத்தை முழுவதும் வெகு அமைதியாக ஒப்புக் கொண்டார். அந்த அளவுக்குஇந்த சைக்கோ நோய், குறுகிய நேரமே நீடிக்கக் கூடியது. ஆனால், விளைவு......?
அமெரிக்காவில், ஆண்டுதோறும் இந்த "சைக்கோ" மனநோய் காரணமாகவே 200 குழந்தைகள், தங்கள் தாய்களால்கொல்லப்படுகின்றன என்று ஒரு புள்ளிவிவரத்தை அமெரிக்க நீதித்துறை அளித்து அலறிக் கொண்டிருக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications