ஒரு காதல்... 2 திருமணங்கள்...

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது காதலனை போராடி மீட்டு அவரையே கரம் பிடித்தார் நவீன சாவித்திரி.

அதே சமயம், தனது காதனுக்கு நிச்சயயிக்கப்பட்ட அந்த மணப் பெண்ணை ஊரார் துணையுடன் தனது காதலனின் தம்பிக்குமணம் முடித்தும் வைத்தார்.

சேலம் மாவட்டம், வெண்ணந்துரைச் சேர்ந்தவர் சுந்தரம் (25). இவர் தறிப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போதுஅதே பட்டறையில் வேலை பார்த்து வந்த சாவித்திரி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இரண்டு வருடங்கள்காதலித்து வந்தனர்.

இந் நிலையில் சுந்தரத்திற்கு திடீரென திருமண ஏற்பாடுகள் நடந்தது. இது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.ஆட்டையம்பட்டியைச் சேர்ந்த தங்கவேலு மகள் பெருமாயி (எ) பிரோமாவுக்கும் சுந்தரத்திற்கும் திருமணம் ஞாயிறன்று காலைநடப்பதாக இருந்தது.

கடந்த ஞாயிறன்று காலை நடப்பதாக இருந்த திருமணத்திற்கு மணப் பெண் உட்பட எல்லோரும் சனிக்கிழமை தயாராகஇருந்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட சாவித்திரி போலீசில் புகார் செய்து "சினிமா பாணியில் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். பஞ்சாயத்துகூடியது. சனிக்கிழமை இரவு முழுவதும் காதலன், மற்றும் அவரது குடும்பத்தினருடன் பஞ்சாயத்து தலைவர்கள் பேச்சுவார்த்தைநடத்தினர்.

விடியற்காலையில் சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள சுந்தரம் ஒப்புக் கொண்டார்.

அதேசமயம், புதிய மணப் பெண்ணாக வந்திருந்த பிரோமாவின் வாழ்க்கை கேள்விக்குரியானது.

மீண்டும் அதே பஞ்சாயத்தில் பிரச்னை எழுந்தது. பெண் வீட்டார் தனது பெண்ணின் கதி என்ன ஆகும் என வினாத் தொடுத்தனர்.அப்போது, பிரேமாவிற்கும் மாற்று வழி கண்டு பிடிக்கப்பட்டது.

சுந்தரத்தின் தம்பி கருணாகரனை அழைத்து பிரோமாவை மணந்து கொள்ளும்படி பஞ்சாயத்து தெரிவித்தது.

கருணாகரனும் ஒப்புக் கொண்டார். விடிந்ததும், ஒரே பந்தலில் காதலனை மீட்ட சாவித்திரி-காதலன், மணப்பெண்-காதலனின்தம்பி ஆகியோரின் திருமணம் சுபமாக நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+