ராமதாசுக்கு வாழப்பாடி கொடுத்த ரூ 2 கோடி: பிரச்சனை மீண்டும் வெடிக்கிறது
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தி ராமதாசுக்கு கொடுத்ததாகக் கூறப்படும் 2 கோடி ரூபாய் விவகாரம் மீண்டும சூடு பிடித்துள்ளது.
ராமதாசுக்கு தான் ரூ. 2 கோடி வழங்கியதாக சில மாதங்களுக்கு முன் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருந்தார். தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்த இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அந்தப் பணத்தை ராமதாஸ் திருப்பித் தர வேண்டும்என்றார் வாழப்பாடி.
ஆனால், தான் பணம் எதையும் வாழப்பாடியிடமிருந்து வாங்கவில்லை என ராமதாஸ் மறுத்திருந்தார்.
இந் நிலையில் மீண்டும் இந்த பண விவகாரம் வெடித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்த ஆப்ரஹாம்ராயன் இப்போது இந்தப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். இவர் சமீபத்தில் தான் ராமதாசுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாககட்சியிலிருந்து விலகினார்.
வாழப்பாடி ராமமூர்த்தியிடமிருந்து வாங்கிய 2 கோடி ரூபாய் குறித்து தனக்கு சாதகமாக ஆடிட் ரிப்போர்ட் தயாரித்துகொடுக்கவில்லை என்பதற்காக ராமதாஸ் என்னை அடியாட்களை வைத்து மிரட்டினார் என ஆப்ரஹாம் ராயன் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து ராயன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸூக்கு கட்சியின் நலன் குறித்தோ அல்லது கட்சித் தொண்டர்களின் நலன் குறித்தோஅக்கறையோ, பொறுப்போ இல்லை. கட்சியில் உள்ளவர்களை வேதனைப்படுத்தும் விதமாக பாமக தலைவர் ராமதாஸ்செயல்படுகிறார்.
சமீபத்தில் அவர் கன்னியாக்குமரி மாவட்ட நிர்வாகிகளிடம் பேசும்போது, அதிமுக அரசு நமக்கு உரிய மரியாதைஅளிக்கவில்லை என்றும், ஜெயலலிதாவை விட கருணாநிதியே மேல் என்றும் கூறியுள்ளார். அதே போல் உள்ளாட்சித் தேர்தலில்பாமக தனித்தே நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது மகன் அன்புமணிக்கு எம்.பி.சீட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்றஅச்சத்தில்தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார்.
அதிமுக கூட்டணியில் நின்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது பாமக தொண்டர்களின் கருத்து. இதை தூக்கியெறிந்துவிட்டு தனது மகனை எம்.பி.யாக்கி, பாஜகவில் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் அவரது கனவு.
பாண்டிச்சேரி தேர்தலில் தனது உறவினர் ஒருவரை முதல்வராக்க விரும்பி, கட்சியில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த மஞ்சினி, ராம்சிங்ஆகியோருக்கு சீட் கொடுக்காமல் புறக்கணித்தார். அதனால்தான் பாண்டிச்சேரி மக்கள் பாமகவை புறக்கணித்து விட்டனர்.பாண்டிச்சேரியில் கட்சியை அழித்தவர் ராமதாஸ்தான். இதே போல் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காகஉழைப்பவர்களைப் புறக்கணித்து வருகிறார் ராமதாஸ்.
வாழப்பாடி ராமமூர்த்தி கொடுத்ததாக கூறிய இரண்டு கோடி ரூபாய் விவகாரத்தில் தனக்கு சாதகமாக ஆடிட் ரிப்போர்ட் தயாரித்துகொடுக்கவில்லை என்பதற்காக என்னை அடியாட்களை வைத்து மிரட்டியவர் அவர்.
ராமதாஸின் செயலால் நானும், எனது ஆதரவாளர்ளும் பாமகவில் இருந்து விலகுகிறோம். தொடர்ந்து அதிமுகவுக்குஆதரவளிப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ஆப்ரஹாம் ராயன்.












Click it and Unblock the Notifications