தமிழக அரசு மீது நடவடிக்கை எடுப்போம்: மத்திய சட்ட அமைச்சர்
டெல்லி:
மனிதாபிமானமற்ற முறையில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்தும், மத்திய அமைச்சர்கள் கீழ்த்தரமானமுறையில் நடத்தப்பட்டது குறித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லேதெரிவித்தார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
கருணாநிதி மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டது மிகவும் கீழ்த்தரமானசெயலாகும். இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாடு போலீஸார் எப்படி ஒரு மத்திய அமைச்சரான முரசொலி மாறன் வீட்டுக்குள் செல்லலாம்? அதுவும் அவர் மேல் எவ்விதவழக்கும் இல்லாத பட்சத்தில் அவர் வீட்டுக்குள் எப்படிச் செல்லலாம்?
மத்திய அமைச்சர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய தமிழக போலீஸார் மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்என்றார்.
முன்னதாக, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதால், பிபி அதிகரித்த நிலையில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறைஅமைச்சர் முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications