கருணாநிதியை உடனே விடுதலை செய்ய வைகோ கோரிக்கை
சென்னை:
கைது செய்யப்பட்டுள்ள கருணாநிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோகூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நள்ளிரவில் வீடு புகுந்து ஒரு முன்னாள் முதல்வர் என்றும் பாராமல்கருணாநிதியைக் கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது.
இது போலீஸாரின் அராஜகத் தன்மையையும், அதிமுக அரசின் காட்டு மிராண்டித்தனத்தையுமே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
திருநாவுக்கரசு கண்டனம்:
கருணாநிதியைக் கைது செய்து அடித்து, இழுத்துச் சென்றது பழிக்குப்பழி வாங்குகின்ற செயலாகும். மத்திய அமைச்சர்பாலுவையும் போலீஸார் முரட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள்.
இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
நெடுமாறன் கண்டனம்:
சமீபத்தில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் சன் டிவி நிருபர் சுரேஷ், மிகவும் கீழ்த்தரமான முறையில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டது, முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் முரட்டுத்தனமாகப் போலீஸாரால் தாக்கப்பட்டது ஆகிய செயல்கள்தமிழகத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications