தமிழக ஆளுநர் மீது மத்திய அரசு கடும் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கருணாநிதி கைது விஷயத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் எனமத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஞாயிற்றிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்பாத்திமா பீவியை உடனடியாக நீக்க முடிவெடுக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லிகூறுகையில்,

ஆளுநர் பாத்திமா பீவி தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார். தமிழகத்தில் அரசியல் சட்டத்தைப்பாதுகாக்கும் கடைமையை அவர் செய்யவில்லை.

பாத்திமா பீவியிடமிருந்து மத்திய உள்துறை செயலாளருக்கு காலையில் அறிக்கை வந்தது. அதில் தமிழகத்தில்உள்ள உண்மையான நிலையை ஆளுநர் எடுத்துக் கூறவில்லை.

இதையடுத்து அவரை உடனடியாக நீக்க பிரதமருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்தது. இது தொடர்பாகஜனாதிபதிக்கு பிரதமர் உடனடியாக கோரிக்கை விடுப்பார். பாத்திமா பீவி உடனடியாக நீக்கப்படுவார்.

கருணாநிதியை கைது செய்ய போலீஸ் நடந்து கொண்ட விதம் குறித்து பாத்திமா பீவி எந்தவிதமான விசாரணையும்நடத்தவில்லை.

இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த அறிக்கை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர்அனுப்பி வைத்த அறிக்கையை காப்பியடித்தது போலத் தான் இருந்தது.

தனிப்பட்ட முறையில் ஆளுநர் இந்த சம்பவம் குறித்து எதையும் விசாரிக்கவேயில்லை.

மத்திய அமைச்சர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பதற்கான காரணங்களைக் கூட ஆளுநரின் அறிக்கைவிளக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு தாக்கப்பட்டது, அவர்கள் காயமடைந்தது, அவர்கள் ரோட்டில்உட்கார வைக்கப்பட்டது, போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டது போன்றை குறித்துக் கூட ஆளுநர்விளக்கவில்லை.

மத்திய அரசின் மீது (மத்திய அமைச்சர்கள்) மாநில அரசு தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முடியாத, கேள்விகேட்காத ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.

பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்தும் ஆளுநர் அறிக்கையில் எந்த விவரமும்இல்லை. டி.வி. நிகழ்ச்சியை (சன் டிவி பொது மக்கள் கருத்து) நிறுத்துவது, நிருபர்களை கைது செய்வது போன்றநடவடிக்கைகளில் ஒரு மாநில அரசு ஈடுபடும்போது அதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்கவைப்பது தான் ஆளுநரின் கடமை.

ஆனால், அதைச் செய்ய பாத்திமா பீவி தவறிவிட்டார். இதனால், அவரை நீக்குகிறோம்.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+