மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வாஜ்பாய் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடக்க இருந்த2வது மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதா அல்லது மாநில அரசின் செயல்பாடுகளை முழுமையாகத் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதா என்பது குறித்து மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், அமைச்சர் அருண்ஷோரிஆகியோர் இந்திய அரசியல் சட்டத்தின் 355 வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசின் செயல்பாடுகளை மத்திய அரசின்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாகச் செயல்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்என்று கூறுகின்றனர்.
ஆனால், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் சரத் யாதவ் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்தில்இந்திய அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
அத்வானிக்காக ஒத்திவைப்பு:
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளார். அவர் இல்லாத நிலையில்தமிழக அரசு தொடர்பாக முக்கிய முடிவு எதையும் எடுக்க வாஜ்பாய் யோசித்து வருகிறார்.
அவரது வருகைக்காகத் தான் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர் வந்தவுடன் மத்திய அமைச்சரவை கூடி ஜெயலலிதா அரசு மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துமுடிவெடுக்கப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications