For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதி விசாரணை, போலீஸ் மீது நடவடிக்கைக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கருணநிதியை போலீஸ் கைது செய்தபோது நடந்த போலீஸ் அட்டூழியம் குறித்து நீதி விசாரணைக்குஉத்தரவிடுமாறு ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவை உத்தரவிடும் எனத் தெரிகிறது.

அதே போல கருணாநிதியைத் தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஜெயலலிதாவுக்கு உத்தரவுபிறப்பிக்க மத்திய அமைச்சரவை உத்தரவிடும்.

டெல்லியில் பிரதமர் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய கூட்டத்துக்கு கடைசியாக வந்துசேர்ந்தார் உள்துறை அமைச்சர் அத்வானி. அவரது வருகைக்காகத் தான் இந்தக் கூட்டம் திங்கள்கிழமையில் இருந்துசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதையும், தேசிய முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும்திமுகவின் தலைவரான கருணாநிதியைக் கைது செய்யப்பட்ட விதத்தையும் மத்திய அரசு கண்டித்ததோடு, தமிழகஅரசின் மேல் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

முதலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது.இரண்டாவதாக, தமிழக அரசுக்குப் பெரும் நெருக்குதல் கொடுத்து, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனையும்,டி.ஆர். பாலுவையும் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக, அரசியல் சட்டம் 256 மற்றும் 257வதுபிரிவுகளைப் பயன்படுத்த நினைத்தது.

ஆனால், அதற்குள் முந்திக் கொண்ட தமிழக அரசு, அந்த 2 மத்திய அமைச்சர்களையும் ஜாமீனில் விடுவிக்கஉத்தரவிட்டது.

ஆனால், தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறும் வரை இந்த விடுதலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று 2 அமைச்சர்களுமே கூறியதைத் தொடர்ந்து, மீண்டும் தமிழக அரசை மத்திய அரசுஅழுத்தத் தொடங்கியது.

அதற்கும் தமிழக அரசு இணங்கி, மாறன் மற்றும் பாலு ஆகியோர் மேல் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டது. அவர்கள் 2 பேரும் தற்போது முழுவதுமாக விடுதலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு மீண்டும் தற்போது கூடியுள்ளது.இந்தக் கூட்டத்தில், அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி, தமிழக அரசு கலைக்கப்படும் என்று நாடேஎதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், பல்வேறு தரப்புகளிலும் இருந்து பறந்து வந்த எதிர்ப்புக் கணைகள், இந்த முடிவை அமைச்சரவையில்பேசக்கூட தகுதியில்லாமல் செய்துவிட்டன. மத்திய அரசின் அரசு வக்கீல்கூட, ஆட்சிக் கலைப்பிற்கான வாய்ப்பேஇல்லை என்று கூறிவிட்டார்.

எனவே, தமிழக அரசை வேறு எவ்வகையில் தண்டிக்க முடியும் என்று தற்போது அலசி ஆராய்ந்துகொண்டிருக்கிறது மத்திய அமைச்சரவை.

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுவதற்குஇக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியைத் தாக்கியதாகக் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மாநிலஅரசுக்கு உத்தரவிடவும் இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆனால், போலீஸ் அதிகாரிகளை விட்டுக் கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை.

கருணாநிதியைக் கைது செய்வதற்காகப் சிபிசிஐடி போலீஸ் சென்றபோது, கருணாநிதி முதலில் நன்றாகத்தான்ஒத்துழைத்தார். போலீஸாரும் அவரை மரியாதையுடன்தான் நடத்தினர்.

ஆனால், மாறன் வந்த பிறகுதான் பிரச்சினையே ஆரம்பித்தது. அவர்தான் முதலில் போலீஸைத் தாக்கியுள்ளார்.அப்போது ஏற்பட்ட கைகலப்பில்தான் கருணாநிதி தடுமாறியுள்ளார். அவர் கீழே விழாமல் இருப்பதற்காகவே,டிஐஜி முகமது அலி, கருணாநிதியின் கையைப் பிடித்துத் தாங்கியுள்ளார் என்று அடித்துச் சொல்கிறது.

மேலும், தங்கள் கடமையைச் செய்யவிடாமல் போலீஸாரைத் தடுத்த காரணத்தினாலும், போலீஸாரைத் தாக்கியகாரணத்தினாலும்தான் 2 மத்திய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டனர் என்றும் தமிழக அரசு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X