ஜெ. அரசைக் கலைக்க சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு
டெல்லி:
2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை வைத்து, தமிழக அரசைக் கலைத்தால், அது மத்திய அரசுக்குத்தான்ஆபத்தாக முடியும் என்று சட்ட வல்லுநர்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் கைதுசெய்யப்பட்டது அரசியல் சட்ட மீறல் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.
குற்றவாளிகளோ இல்லையோ, இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பேலீஸாரால் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் போலீஸாரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டுஇருப்பதையும் அனைவரும் நன்கு அறிவர் என்ற முக்கியமான பாயிண்ட்டை அள்ளி வீசுகிறார் முன்னாள் சட்டஅமைச்சர் சாந்தி பூஷன்.
இப்படியெல்லாம் பார்த்தால், "முதல்வன்" படக் கதைதான். நாளுக்கு ஒரு ஆட்சிக் கலைப்பு, மணிக்கொரு முதல்வர்என்ற டைப்பில்தான் மாநில அரசுகள் பரிதாபமாக முழித்துக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார் உச்ச நீதிமன்றநீதிபதி ஒருவர்.
தவிர, "கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி ஏதாவது ஒரு கோர்ட் கூறி, அதை ஒரு மாநில அரசுசெய்யத் தவறினால்தான், அதை சட்ட மீறலாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், இங்கு அது போன்ற சம்பவம்எதுவும் நடந்து விடவில்லையே" என்று அங்கலாய்க்கிறார் பூஷன்.
"சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காகத்தான், போலீஸார் கருணாநிதியின் வீட்டில் நுழைந்து, அவரைக் கைதுசெய்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மத்திய அமைச்சர்கள், போலீஸாரின் நடவடிக்கையைத் தடுத்துள்ளனர்.இதுதான் சட்ட மீறல்" என்று தமிழக அரசுக்கு சப்போர்ட் பண்ணாத குறையாக பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறார்பூஷன்.
மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்க்கவில்லை என்ற காரணத்திற்காகவே, தமிழக ஆளுநராகஇருந்த பாத்திமா பீவியைத் தூக்கி வீசியுள்ளனர். இதுவே ஒரு தவறான நடவடிக்கையாகும். இந்நிலையில், இதேகாரணங்களைக் காட்டி, மாநில அரசையே கலைக்க நடவடிக்கை எடுத்தால், அது போன்ற ஒரு அரசியல் சட்ட மீறல்எதுவும் இருக்க முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்கள் பற்றி முழுமையாக எதுவுமே விசாரிக்காமல்,தமிழக அரசைக் கலைப்பது முறையே அல்ல என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மத்திய அரசின் சட்ட வல்லுநரும் இதே கருத்தைத்தான் பிரதிபலித்துள்ளார். மத்திய அரசின் அவசர அழைப்பைஏற்று லண்டனில் இருந்து டெல்லி விரைந்துள்ள, மத்திய அரசு வக்கீல் சோலி சோரப்ஜி, தமிழகத்தில் 356வதுஅரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியாது என்று ஆலோசனைகூறியுள்ளார்.
சன் டி.வியில் காட்டப்பட்ட காட்சிகளை வைத்தும், அதற்கு நேர் மாறாக போலீஸாரால் எடுக்கப்பட்டுள்ளகாட்சிகளை வைத்தும் நன்றாக ஆராய்ந்த பின்னரே ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும். தமிழக அரசைஅவசரப்பட்டுக் கலைத்தால், அது நிச்சயம் மத்திய அரசுக்கு எதிராகத்தான் திரும்பும் என்பதில் எந்தவிதமானசந்தேகமும் இல்லை.
பிரதமர் வாஜ்பாயைச் சொல்லியும் குற்றமில்லை. அவர் என்ன செய்வார், பாவம்? அவருடைய கூட்டணியில்இருக்கும் சிலர், அவரைத் தூண்டுவதால்தான் இத்தனை குளறுபடிகளும், போராட்டங்களும்.
எப்படி இருந்தாலும், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் அடுத்தகட்ட மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தும் எந்த ஒரு முடிவையும் அரசுஎடுக்காமல் இருந்தால் சரிதான்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications