மத்திய அரசு தலைமை வக்கீலுக்கு வாஜ்பாய் அவசர அழைப்பு
டெல்லி:
லண்டன் சென்றிருந்த மத்திய அரசு தலைமை வக்கீல் அவசரமாக டெல்லி திரும்புகிறார்.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டது குறித்து விவாதிப்பதற்காக மத்தியஅமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கூடுகிறது.
திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டதன் மூலம் சட்டம் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றியும், மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்.
மத்திய அரசு வக்கீல்:
மத்திய அரசுக்கு சட்டரீதியான பிரச்சனைகளில் ஆலோசனை வழங்கும் பொறுப்பு மத்திய அரசு தலைமைவக்கீலுக்கு (அட்டர்னி ஜெனரல்) உள்ளது.
மத்திய அரசு வக்கீல் சோலிசோரப்ஜி தற்போது லண்டனில் இருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பிரச்சனைகள் குறித்து அரசுக்குஆலோசனைகள் வழங்க அரசு தலைமை வக்கீல் இருக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் விரும்புகிறார்.
இதையடுத்து, லண்டனில் இருக்கும் அரசு தலைமை வக்கீல் சோலி சோரப்ஜியை டெல்லி வரும்படி பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி திரும்புகிறார்:
இதைத்தொடர்ந்து மத்திய அரசு வக்கீல் சோலி சோரப்ஜி லண்டனில் இருந்து புறப்பட்டு டெல்லி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டம் தொடர்பானகருத்துக்களைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications