இது கருணாநிதி என்ற தனி மனிதனுக்கு நடந்த கொடுமையல்ல...
சென்னை:
போலீசாரால் தான் தாக்கப்பட்டது, கருணாநிதி என்ற தனி மனிதனுக்கு நடந்த கொடுமை அல்ல. ஒட்டுமொத்தமனித குலத்தின் உரிமைக்கு நடந்துள்ள கொடுமை என கருணாநிதி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
என்னை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பல மாநிலமுதல்வர்கள், பத்திரிக்கைகள், தொண்டர்கள், பல கட்சித் தலைவர்கள், ஜெயலலிதா கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீதான தாக்குதல் அகில இந்திய, உலகம் தழுவிய பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது.
எனக்கு விழுந்த அடியின் வலி இன்னும் குறையவில்லை. வேதனை குறையவில்லை.
நடந்தது என்ன?
29ம் தேதி இரவு கனிமொழி எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு 12 மணிக்குத் தான் தூங்கினேன். திடீரென 2மணிக்கு என் மனைவி ராஜாத்தி படுக்கை அறைக்கு ஓடி வந்தார். போலீஸ் வந்திருக்கு என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே போலீஸ்காரர்களும் படுக்கையறைக்குள் வந்தனர்.
வரும்போது ஹாலின் தாழ்பாளை உடைத்திருக்கிறார்கள். வந்த போலீசார் எல்லோருமே தடித்தடியாய்இருந்தார்கள்.
உங்களை கைது பண்றோம் வாங்க என்றனர். ஏம்பா, கைது செய்ய முறை இல்லையா, வாரண்ட் இருக்கா என்றேன்.அதெல்லாம் இல்லை நீங்க வாங்க என்றனர்.
இதையடுத்து மாறனுக்கு போன் செய்ய முயன்றேன். ஆனால், போன் வயர்களை போலீஸ் கீழேதுண்டித்துவிட்டிருந்தனர். நல்லவேலை செல்போன் இருந்ததால் மாறனைத் தொடர்பு கொண்டு தகவலைச்சொன்னேன்.
பின்னர் போலீசிடம் நான் வெறும் கைலியுடன் இருக்கிறேன். அண்டர்வேர் போட்டுக் கொள்கிறேன், சட்டைப்போட்டுக் கொண்டு வருகிறேன் என்றேன்.
நான் அண்டர்வேர் போட முயன்றபோது அங்கு நின்றிருந்த 2 பெண் போலீஸ்களும் விலகவில்லை. இதையடுத்துஎனது மனைவியும் மகளும் ஒரு போர்வையால் என்னை மறைத்துக் கொண்டனர். பிறகு தான் அண்டர்வேர் கூடபோட முடிந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications