ஜாமீன் மனுக்களை எதிர்க்க வேண்டாம்: தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுக்களுக்கு தமிழக அரசு எதிர்ப்புதெரிவிக்கக் கூடாது என்று அரசு வக்கீலுக்கு முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார்.
ரூ.12 கோடி மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் ஆர்.எஸ்.ஸ்ரீதர்.இவர் தன்னை ஜாமீனில் விடும்படி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், அரசுவழக்கறிஞர் கோமதி நாயகத்திடம் கூறும்போது:
ஒரு குற்றவாளி ஜாமீன் மனுத் தாக்கல் செய்யும்போது அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த விஷயத்தில், மாநில அரசு தனக்கு சாதகமான முடிவுகளைப் பெறும் வகையில் நீதிமன்றத்தில் வாதாடநினைத்தால், நீதிமன்றமும் தனக்கு சாதகமான வகையில் நடந்து கொள்ளும். இது மாநில அரசுக்குத் தான்தேவையில்லாத பிரச்சனைகளைக் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் பல விஷயங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
மேம்பால ஊழல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது போலீஸார் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளனர்.
இவ்வாறு நீதிபதி அசோக்குமார் கூறினார். நீதிபதி அசோக்குமார் கருணாநிதியை அரசு நடத்திய விதம் குறித்துதனது கடும் கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளார். போலீசாரையும் அவர் ஒரு பிடி பிடித்தார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications