கைதான அதிகாரிகளுக்கு அமோக ஆதரவு
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் நம்பியார் மற்றும்இன்ஜினியர் சீனிவாசனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
சென்னை நகரில் சிறு மேம்பாலங்கள் கட்டியதில் ரூ. 12 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள்முதல்வர் கருணாநிதி, சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார் மற்றும் மாநகராட்சி இன்ஜினியர் டாக்டர்சீனிவாசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் அரசுப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீனிவாசன். உலக அளவில் சிறந்தபொறியாளராக அறியப்பட்டவர். வெளிநாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில் 1994ம் ஆண்டு தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோதுபோக்குவரத்து சீரமைப்பு தொடர்பாக பல ஆலோசனைகளை அளித்துள்ளார்.
1997ம் ஆண்டு சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக உயர்மட்டப் பரிசீலனை குழுவும்,போக்குவரத்து மேம்பாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டபோது, அதில் அவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
நம்பியாரும் சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர். அப்பழுக்கற்றவர் என்று அனைவராலும்புகழப்பட்டவர். அவர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.
நம்பியார் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் அரசுக்குக்கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் பிரதிநிதிகள் 15 பேர் அடங்கிய குழு தமிழக தலைமைச் செயலாளர்சங்கரைச் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
தமிழக பிற்பட்டோர் நலத்துறை செயலாளரும், சங்க தற்காலிக தலைவருமான ஆதிமூலம் இக்குழுவிற்குத் தலைமைவகித்தார்.
மாநகராட்சி கமிஷனராக ஆச்சார்யலு பதவியேற்று ஒருவாரம்தான் ஆகிறது. அதற்குள் எப்படி அவருக்கு பாலஊழல் குறித்து அத்தனை விவரங்களும் தெரிந்தன? அவர் பால வேலைகள் குறித்த ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்ளவே சில காலம் தேவைப்படும்.
இந்த நிலையில் அவர் நம்பியார் மீது புகார் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் சங்கரிடம்தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையை கேட்டுக் கொண்ட சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இனிஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications