For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் கல்வி: இந்திய மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் கல்வி நிலையங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்கள் இனி புதிய கட்டுப்பாடுகளைசந்திக்க வேண்டி வரும்.

அந் நாட்டிலுள்ள கல்வி நிலையங்கள் பல நாட்டு மாணவர்களையும் இழுக்க முயன்று வருகின்றன. ஆனால்,ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறையின் (இமிக்ரேஷன்) சார்பில் 2 பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த நாட்டு மாணவர்களை ஆஸ்திரேலியாவுக்கு வர ஊக்குவிப்பது என்பது குறித்து ஒரு பட்டியலும்எந்தெந்த நாடுகளின் மாணவர்களை தவிர்ப்பது என்பது குறித்து இரண்டாவது பட்டியலும் தயாரித்துள்ளதுஇமிக்ரேஷன் பிரிவு.

இதில் இரண்டாவது பட்டியலில் தான் இந்தியா இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா தவிர சீனா மற்றும்பல இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த 11 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பல கல்வி நிலையங்களில் கிட்டத்தட்ட 10,000 இந்திய மாணவர்கள் படித்துவருகின்றனர்.

இப்படி வேண்டிய நாடுகள், வேண்டாத நாடுகள் என 2 பட்டியல்கள் தயாரித்து பல நாடுகளை ஒதுக்குவதை பலகல்வி நிலையங்கள், தொழில்கல்லூரிகள் ஆகியவை எதிர்த்துள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய அரசோ குடியுரிமைவிதிமுறைகளில் வெளிப்படையாக செயல்படுவதற்காகத் தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக்கூறுகிறது.

ஆனால், அரசின் இந்த நடவடிக்கையை பல பல்கலைக்கழகங்கள் ஆதரித்துள்ளன. இதன் மூலம் வெளிநாட்டுமாணவர்களை சேர்க்கும் கல்வி நிலையங்களையும் கூட ஒழுங்குபடுத்த முடியும் என பல்கலைக்கழகங்கள்கருதுகின்றன.

அரசின் இந்தத் திட்டத்தை குடியுரிமை மற்றும் கல்வி நிலையங்களில் சேர அனுமதி வாங்கித் தரும் கன்சல்டன்சிஅமைப்புகள் எதிரித்துள்ளன. சிலர் வரவேற்கவும் செய்துள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம், சரியான தகுதியும் சான்றிதழ்களும் உள்ளவர்கள் மற்றுமே இனிஆஸ்திரேலியாவில் கல்வி நிலையங்களில் சேர முடியும் என சிட்னியில் உள்ள கன்சல்டன்சி நிறுவனஉரிமையாளரான அருண் கார்க் கூறுகிறார்.

ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கையால் இந்தியாவை விட அதிகமாக பாதிக்கப்படப் போவது சீனா மற்றும்பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் தான். இந் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கெடுவையும் தாண்டி அதிகநாட்கள் (ஓவர் ஸ்டே) ஆஸ்திரேலியாவில் தங்கி வருகின்றனர்.

அதே போல மாணவர்களின் பொருளாதார நிலைமையையும் இனி குடியுரிமைத்துறை தீவிரமாக கண்காணிக்கும்.ஆஸ்திரேலியாவுக்குள் வரும் மாணவர்கள் தங்கள் முதல் ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக 12,000 ஆஸ்திரேலியடாலர்களை கையோடு கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கப்பட உள்ளது.

அதே போல இந்த பணம் வந்த வழியையும் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் உடல் நிலை, அவர்களின்பழக்க வழக்கங்களையும் இனி குடியுரிமைத்துறை தீவிரமாக கண்காணிக்கப் போகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் உள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க நுழைவகு கூட சிரமமாகலாம்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் பற்றாக்குறையாக உள்ள சாப்ட்வேர் நிபுணர்களின் தேவையை பூர்த்திசெய்யும் விதத்தில் திறமையான வெளிநாட்டு மாணவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே பணியமர்த்திக்கொள்ளவும் அரசு முயலும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இவர்கள் ஸ்கில்ட் இன்டிபெண்டன்ட்பிரிவின் கீழ் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

அரசின் இந்த முடிவுகளை சில இந்திய-ஆஸ்திரேவிய கல்வி அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் மீது அந் நாட்டில் மிக நல்ல அபிப்ராயம் தான் உள்ளது என்கிறார்குடியுரிமை கன்சல்டன்டான விக்டர். எஸ்.லம்பா. கல்வி கற்க என்ற பெயரில் பிற நோக்கங்களுடன்ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் தான் அரசின் புதிய திட்டத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்கிறார்லம்பா.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X