போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்- ஸ்டாலின்
மதுரை:
என் தந்தை (கருணாநிதி) மீதும் என் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களிடம் முறைகோடாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுப்பேன் என இன்று விடுதலையாகி சிறையிலிருந்துவெளியே வந்த சென்னை மேயர் ஸ்டாலின் கூறினார்.
சிறையிலிருந்து வெளியே வந்த அவரை ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் வரவேற்றனர். அதிர் வேட்டுகள்முழங்க அவர் வரவேற்கப்பட்டார். நேற்றே அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்ததால் நேற்றுமாலையே தொண்டர்கள் சிறை வாசல் முன் குவிந்துவிட்டனர்.
ஆனால், அவர் சனிக்கிழமை தான் வெளியே வர முடியும் எனக் கூறப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.இருந்தாலும் நள்ளிரவில் அவரை வெளியே விட்டாலும் விடுவார்கள் எனக் கருதிய சில திமுகவினர் கார்கள் சகிதம்சிறை வாசலிலேயே காத்திருந்தனர். கார்களிலேயே அவர்கள் இரவு முழுக்க அமர்ந்திருந்தனர்.
காலையில் அவர் விடுதலையானபோது சிறை வாசலில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துவிட்டனர். இதனால்மதுரை ஜெயில் ரோட்டிலும் ஆரப்பாளையம் செல்லும் சாலையும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்தக்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறைலிருந்து வெளியே வந்த ஸ்டாலினை தொண்டர்கள் மாலையணிவித்து வரவேற்றனர். பின்னர் அண்ணாசிலைக்கு மாலையணிவித்துவிட்டு நிருபர்களிடம் கூறுகையில், என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் போலியாகஜோடிக்கப்பட்டவை. இருந்தாலும் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
நான் மேயராக உள்ளதால் சென்னை மாநகாட்சி மன்றத்தைக் கலைத்துவிட ஜெயலலிதா அரசு முயன்று வருகிறது.இதை சட்டரீதியில் தடுத்து நிறுத்தவும் இது தொடர்பான வழக்கைச் சந்திக்கவும் தான் நான் ஜாமீனில் வெளியேவந்தேன் என்றார் ஸ்டாலின்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதியை போலீசார் வீட்டில் புகுந்து அடித்து இழுத்துச் சென்றபோதுகாரில் பெங்களூர் சென்று கொண்டிருந்தால் ஸ்டாலின். கருணாநிதி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன்சென்னை திரும்பிய ஸ்டாலின் நீதிபதி முன் ஆஜரானார்.
இதையடுத்து அவரை ஜூலை 14ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை சென்னை மத்தியசிறையில் தான் வைக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், கருணாநிதியைசென்னை சிறையில் வைத்த போலீசார் ஸ்டாலினை போலீஸ் வேனிலேயே இரவோடு இரவாக மதுரை சிறையில்கொண்டு சென்று அடைத்தனர்.
போலீசின் இந்த செயலுக்கு நீதிபதியே கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சனிக்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்த ஸ்டாலின் கார் மூலமாகவே சென்னை புறப்பட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications