ஸ்பிக் ஊழல்: ஜெயாவுக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரம் கெடு
டெல்லி:
அரசு நிறுவனமான டிட்கோவின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்றது தொடர்பாகமுதல்வர் ஜெயலலிதா மீது நடந்து வரும் வழக்கில் 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு அவருக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) பங்குகளை ஏ.சி. முத்தைய்யாவின் தந்தையானஎம்.ஏ.எம். சிதம்பரம் செட்டியாரின் ஸ்பிக் நிறுவனம் வாங்கியது. இந்தப் பங்குகள் சந்தை விலையை விட குறைந்தவிலைக்கு ஸ்பிக் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன.
இதனால் அரசுக்கு ரூ. 77 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதா, சிதம்பரம் செட்டியார்,அன்றைய தொழில்துறைச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குகளைத் தொடர்ந்தார் சுவாமி.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணைக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றதில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம்தேதி அளித்த தீர்ப்பில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்தது.
அதோடு இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடந்தவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்தது.ஆனால், வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற பின்னர் தான் வெளியிட வேண்டும் எனவும்உத்தரவிட்டது.
இந்த அப்பீல் மீது திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடந்தது. நீதிபதிகள் கே.டி. தாமஸ், ஆர்.பி. சேத்தி அடங்கியபெஞ்ச் இதை விசாரித்தது. அப்போது சி.பி.ஐயின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்கு 2 வாரஅவகாசம் அளித்து. அதே போல டிட்கா மற்றும் தமிழக அரசு ஆகியோருக்கும் 2 வார காலத்தில் பதிலளிக்கஉத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெயலலிதா, முத்தைய்யா, ராமச்சந்திரன் ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப் பத்திரிக்கையை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications