நெல்லையிலிருந்தும் ரயில் மூலம் குடிநீர்
சென்னை:
சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்க திருநெல்வேலியிலிருந்தும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை ஆரம்பித்ததிலிருந்தே, தண்ணீர் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறதுசென்னை மாநகர். நெய்வேலி, ஈரோடு, மேட்டூர் என்று பல இடங்களிலும் இருந்து சென்னைக்கு தண்ணீர்"இறக்குமதி" செய்யப்பட்டு வருகிறது.
இதனால், திருநெல்வேலியிலிருந்தும் தண்ணீரை "இறக்குமதி" செய்ய தமிழக அரசு தற்போது முடிவெடுத்துள்ளது.சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால், அங்குள்ள ஏரிகள் அனைத்தும்நிரம்பி வழியத் துவங்கியுள்ளன.
இப்படி வீணாகும் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு வந்தால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தஆரம்பித்துள்ளது தமிழக அரசு. திருநெல்வேலியிலிருந்து ரயில்கள் மூலமாகவே தண்ணீரைக் கொண்டு வருவதற்குஅரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே, சென்னையின் 100 குடிசைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கு ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டவும் அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 19ம் தேதிக்குள் இப்பணிகள் முடிவடையும் என்று தமிழகஅரசு கூறியுள்ளது.
மேலும், சென்னை நகர குடிநீர்ப் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்காக, புதிய வீராணம் திட்டத்திற்கும் தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.720 கோடி மதிப்பில், அடுத்த ஓராண்டுக்குள் செயல்படுத்தப் படவிருக்கும்இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் 18 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications