வாஜ்பாயுடன் மோத வேண்டாம்: ஜெயாவுக்கு வாழப்பாடி அறிவுரை
மதுரை:
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக ராஜிவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நேற்று நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனையும், டி.ஆர். பாலுவையும்பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாரை அமைச்சராகக்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய உரிமை பிரதமருக்குத்தான் உள்ளது. அவரது உரிமையில் ஜெயலலிதா தலையிடுவது சரியல்ல. இது போன்ற மோதல்கள் தமிழகத்துக்குநல்லதல்ல. இதனால் மாநில வளர்ச்சி தான் பாதிக்கப்படும்.
கருணாநிதியை நள்ளிவரவில் புகுந்து கைது செய்தது, மத்திய அமைச்சர்களையும் அடித்து இழுத்துச் சென்றதுபோன்றவையும் கடும் கண்டனத்துக்குறியவை.
திமுகவுக்கும் கண்டனம்:
கருணாநிதி கைது செய்யப்பட்டதால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என தி.மு.க. சொல்கிறது. இதே திமுக தான்பிகாரில் லாலு பிரசாத் யாதவ் அரசைக் கலைக்க எதிர்ப்புத் தெரிவித்தது.
இவ்வாறு வாழப்பாடி கூறினார்.












Click it and Unblock the Notifications