ஜெ. முதல்வரானதை எதிர்க்கும் 4 மனுக்கள்: உச்ச நீதிமன்றம் ஏற்பு
சென்னை:
ஜெயலலிதா முதல்வரானதை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன.
சென்ற திமுக ஆட்சியில் நடந்த டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா, 3 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்றார்.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டவிதியின்படி ஜெயலலிதா கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இந்நிலையில் 6 மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்றநிபந்தனையுடன் அவர் தற்போது முதல்வர் ஆகியுள்ளார்.
இதற்கிடையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் முதல்வராவதையும் தடைசெய்யவேண்டும். மேலும் தற்போது அவரை முதல்வராக்கியது செல்லாது என்று கோரி உச்ச நீதி மன்றத்தில் 4 பேர்தனித்தனியே மனு செய்திருந்தனர்.
இதற்கிடையில் திமுக திடீரென தன்னையும் ஒரு வாதியாக இணைக்க விரும்பி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனுசெய்திருந்தது.
வெள்ளிக்கிழமை இந்த 5 மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பருச்சா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்டபெஞ்ச் முன் வந்தது.
அப்போது நீதிபதிகள், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மட்டும் தள்ளுபடி செய்தனர். மற்ற 4 மனுக்கள்ஏற்றுக் கொள்ளப் பட்டன. நீதிமன்றத்தை அரசியல் கூடமாக்க வேண்டாம் என திமுகவுக்கு அறிவுரை கூறியநீதிபதிகள் அந்தக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தனர்.
இது தவிர மற்ற 4 மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றவும்நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சை தலைமை நீதிபதி அமைப்பார். இந்தபெஞ்ச் தனது விசாரனையை செப்டம்பர் 4ம் தேதி தொடங்கும்.
ஜெயாவுக்கு அவகாசம்:
இதற்கிடையில், ஜெயலலிதா சார்பில் எதிர் மனு செய்ய 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயலலிதா கூறுகையில், "நீதிமன்றமே திமுகவின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இதில் மேலும்நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை "என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுள்ளதாக காங்கிரஸ் தலைவி சோனியா கூறிய குற்றச்சாட்டுகுறித்து கேட்டதற்கு, மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று மறுப்புத் தெரிவித்தார்.
இது பற்றி கருணாநிதியிடம் கேட்டதற்கு, "அரசியல் கட்சிகள் சார்பில் இதுகுறித்து வாதிட முடியாது என்பதால்தள்ளபடி செய்துள்ளார்கள். இதனால் திமுகவுக்குப் பின்னடைவு ஏதும் இல்லை. மற்ற 4 மனுக்களைத் தான் ஏற்றுக்கொண்டுவிட்டார்களே" என்று திருப்பிக் கேட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications