கிருஷ்ணா நீர் விஷயத்தில் பொய் சொல்கிறார் கருணாநிதி- ஜெயா புகார்
சென்னை:
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வந்தது தன் முயற்சியால் தான்என்று தவறான தகவல்களை கூறி கருணாநிதி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கருணாநிதிமீது குற்றம் சாட்டியுள்ளார்.
பல பத்திரிக்கைகளிலும் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட்டதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி நன்றி கூறியதாகதகவல்கள் வந்துள்ளன.
தான் மேற்கொண்ட முயற்சிகளால்தான் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட்டார் எனவும் கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் கருணாநிதி.
ஆனால், உண்மை வேறுவிதமானது. நான் பதவி ஏற்றுக் கொண்டபின் ஜுன் மாதம்13ம் தேதி கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவை கேட்டுக் கொண்டேன்.
இது குறித்து அவருடன் ஜுன் மாதம் 22ம் தேதி தொலைபேசி மூலம் பேசினேன்.அப்போது சென்னையில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம் குறித்து விவரித்து உடன்தண்ணீர் திறந்துவிடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
எனது வேண்டுகோளை நாயுடு உடனே ஏற்றுக் கொண்டு கண்டலேறு நீர்த்தேக்கத்தில்இருந்து 190 கன அடி நீர் திறந்துவிட ஒப்புக் கொண்டார். தண்ணீர் திறந்து விடவேண்டியதற்கு கடைபிடிக்க வழிமுறைகள் பற்றி விவாதிக்க இரு மாநில தலைமைச்செயலாளர்களும் பேச்சவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்.
அதன் படி இரு மாநில தலைமைச் செயலாளர்களும் ஜுன் மாதம் 26ம் தேதி சந்தித்துபேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஜுன் மாதம் 2ம் தேதி கண்டலேறுநீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
2ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த நீர் தமிழக எல்லையை ஜுன் மாதம் 12ம்தேதி வந்து அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆனாலும் கண்டலேறு -பூண்டிக்கு இடையிலான பகுதியில் சிலர் அதிகாரமற்ற முறையில் நீரை பாசனத்திற்காகஎடுத்துக் கொண்டதால் தண்ணீரின் வேகம் குறைந்து தண்ணீர் தமிழக எல்லையைஎட்டுவது தாமதமானது.
நான் இது குறித்து உடனே நாயுடுவுக்கு ஃபேக்ஸ் மூலம் செய்தி அனுப்பி, அதிகாரமற்றமுறையில் தண்ணீர் எடுப்பவர்களை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.
அவர் உடனே எடுத்த நடவடிக்கையின் காரணமாக கிருஷ்ணா நதி நீர் ஜுன் மாதம்18ம் தேதி தமிழக எல்லையை வந்து அடைந்தது. தான் எடுத்த நடவடிக்கை குறித்துசந்திரபாபு நாயுடுவும் எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அவருக்கு நான் நன்றி கூறிபதில் கடிதமும் எழுதினேன்.
இதுதான் நடந்த உண்மை. உண்மைகள் இவ்வாறு இருக்கும் போது கருணாநிதிமக்களை திசைதிருப்பும் விதமாக தான் மேற்கொண்ட முயற்சியால் தான் கிருஷ்ணாநதிநீர் தமிழகத்திற்கு வந்தது என்று கூறி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் என்றுகூறி.உள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications