பஸ் நிலையம் மீது குண்டுவீச்சு தாக்குதல்: 2 பேர் சாவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிக்கல்:

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் டவுனில் பேருந்து நிலையத்தின் மீது ஒரு கும்பல் வெடி குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தியது.

இதில் 2 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் நடந்தது.

இறந்தவர்கள் இருவரும் ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அலறிக் கொண்டு சிதறிஓடினர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாதிக் கலவரத்துக்குப் பேர் போன இந்த மாவட்டத்தில் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டிருப்பதுபெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த இருவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற